'மாஸ்டரு'க்குப் பிறகு விஜய்யை இயக்கலையாம்... இந்த ஹீரோவைதான் சுதா கொங்கரா இயக்கப் போறாராமே!

By

சென்னை: இயக்குனர் சுதா கொங்கரா அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

ஶ்ரீகாந்த், விஷ்ணு விஷால் நடித்த துரோகி படம் மூலம் இயக்குனர் ஆனவர் சுதா கொங்கரா. அடுத்து, மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கினார்.

இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் மோகன்பாபு

நடிகர் மோகன்பாபு

ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது. இதில் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார். இதில் ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர்.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாயின.

மாஸ்டருக்குப் பிறகு

மாஸ்டருக்குப் பிறகு

இந்நிலையில், இப்போது அவர் வெப்சீரிஸை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை சுதா, இயக்கப் போவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பாகச் செய்திகள் வெளியாயின. விஜய்யை சந்தித்துக் கதை சொன்னதாகவும் அதை ஏற்றுக்கொண்ட விஜய் படத்துக்கு ஓகே சொன்னதாகவும் கூறப்பட்டது.

Recommended Video

Master Special Update | Thalapathy Vijay | Loskesh Kanagaraj
சிம்புவை இயக்குகிறார்

சிம்புவை இயக்குகிறார்

பின்னர் விஜய்யை அவர் இயக்கவில்லை என்றும் அவர் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கப் போவதாகவும் அது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் கசிந்துள்ளன. இதனால் அவர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம். தற்போது மாநாடு படத்தில் நடித்துவரும் சிம்பு, அதை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X