டான்.. டான்..சுதா சொன்ன குட்டி கதை.. கேட்டதும் ஓகே சொன்ன விஜய்.. செம மாஸ் அறிவிப்பு வரப்போகிறது!

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்க இருக்கிறார்.

Recommended Video

குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிலிப்பைன்ஸ் ஏர்போர்ட்டில் நடனமாடிய நசிகர்கள் - வைரல் வீடியோ

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாக உள்ளது. அடுத்த ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும். சென்னையில் நடக்கும் கதை இது என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த படம் திரில்லர் ஜானரில் வெளியாக உள்ளது. இதுவரை இந்த படத்தின் மூன்றுக்கும் மேற்பட்ட போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகிவிட்டது.

பெரிய படம்

பெரிய படம்

மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது. மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் கடந்த இரண்டு வாரம் முன் வெளியானது.

அடுத்த படம்

அடுத்த படம்

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்கு இப்போதே தயாராகிவிட்டார். ஏற்கனவே இவர் இரண்டு இயக்குனர்களிடம் அடுத்த படத்திற்காக கதை கேட்டு இருக்கிறார். கடைசியில் தற்போது நடிகர் விஜய், சுதா கொங்காரா உடன் படம் நடிக்க முடிவு செய்துள்ளார். விஜயின் அடுத்த படத்தை கண்டிப்பாக சுதா கொங்காராதான் இயக்க போகிறார் என்று உறுதியாகி உள்ளது.

எப்படி உறுதி

எப்படி உறுதி

அதன்படி நேற்று முதல் நாள் நடிகர் விஜய் சுதா கொங்காராவிடம் கதை கேட்டுள்ளார். சுதா கொங்காரா சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். விஜயிடம் சுதா கொங்கரா டான் பாணி கதை ஒன்றை சொல்லி இருக்கிறாராம். விஜய் கோலிவு கிராபில் இதுவரை இல்லாத ஜானர் கொண்ட படம் இது என்று கூறுகிறார்கள். இதனால் விஜய் அந்த கதையை கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

படம் போடுங்கள்

படம் போடுங்கள்

அதே சமயம் விஜய் சுதா கொங்காராவின் படத்தை போட்டு காட்டும் படி கேட்டுள்ளார். சுதா கொங்காரா நடிகர் சூர்யாவை வைத்து சூரரை போற்று படம் எடுத்துள்ளார். சூரரை போற்று விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சூரரை போற்று படத்தை நேற்று விஜய் அவரின் வீட்டில் பார்த்து இருக்கிறார்.

சில காட்சிகள்

சில காட்சிகள்

ஆனால் விஜய்க்கு முழு படம் போட்டு காட்டபடவில்லை. முக்கால்வாசி படத்தை விஜய் பார்த்து இருக்கிறார். இதை பார்த்து சுதாவை விஜய் பாராட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பின்பே விஜய், சுதாவின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். விஜயின் சினிமா கிராபில் முதல் பெண் இயக்குனராக சுதா கொங்காரா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X