சூர்யாவை நம்பினால் இனிமே சரி வராது.. அந்த ஹீரோவை டிக் செய்த சுதா கொங்கரா? பரபரக்கும் தகவல்!

சென்னை: இறுதிச்சுற்று படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் அந்த படத்தைப் பார்த்து வியந்து போனார்கள்.

அதன் பின்னர் சுதா கொங்கரா அக்ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று படத்தின் இந்திய ரீமேக்கை உருவாக்கியுள்ளார். சர்ஃபிரா எனும் தலைப்பில் உருவாக்கப்பட்ட அந்த திரைப்படம் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள நிலையில் இன்னமும் அந்த படம் எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியாகவில்லை.

Sudha Kongara will rope Sivakarthikeyan for her next movie

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா புறநானூறு படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதிரடியாக நடிகர் சூர்யா தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பில், சுதா கொங்கரா படம் உருவாக மேலும் காலதாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

தரமான இயக்கம்: தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலே உள்ளனர். அதிலும் அவர்கள் பெரிய நடிகர்களை வைத்து அதிக பட்ஜெட்டில் படமாக்குவது எல்லாம் நடக்காத விஷயம் என இருந்த நிலையில் அதை எல்லாம் மாற்றி சாதித்து காட்டியவர் சுதா கொங்கரா. மாதவன், ரித்திகா சிங்கை வைத்து அவர் இயக்கிய இறுதிச் சுற்று திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. மற்ற மொழிகளிலும் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

சூரரைப் போற்று: தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை யோசித்து படமாக்க முடியுமா என்கிற வியப்பை கொடுக்கும் அளவுக்கு சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்கிற கனவை நனவாக்கிய ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருவரும் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான தேசிய விருதுகளை வென்றனர்.

புறமுதுகை காட்டிய புறநானூறு: சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை ஏற்க வேண்டும் என்கிற முனைப்புடன் சுதா கொங்கரா களமிறங்க நிலையில், அரசியல் தாக்கங்கள் நிறைந்த அந்த படத்தை தற்போது படமாக்கும் சூழலில் சூர்யா இல்லாத நிலையில், அந்தப் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவும் அந்த படம் வர காலதாமதம் ஆகும் என்று அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஹீரோ?: சுதா கொங்கரா அடுத்ததாக யாரை வைத்து தமிழ் சினிமாவில் படம் எடுக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அஜித், விஜய், துருவ் விக்ரம், சிம்பு லிட்டர் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை சந்தித்து சுதாகரன் கதை சொல்லி இருப்பதாகவும் ஆக்சன் கலந்த படமாக அந்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து படம் இயக்க சென்ற நிலையில், சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர். அமரன் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், சுதா கொங்கரா படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் சரியாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X