SK: இது எல்லாம் சூர்யாவுக்கு கிடைக்க வேண்டியது.. சிவகார்த்திகேயனை சுதா எப்படி செதுக்குறாங்க பாருங்க!
சென்னை: சிவகார்த்திகேயன் இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். தற்போது தனது 23, 24 மற்றும் 25 வது படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால், படக்குழுவினர் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக அப்டேட்டுகளை வாரி வழங்கி கொடுத்து வருகிறார்கள். இப்படியான நிலையில், சிவகார்த்திகேயனின் 25 வது படமான பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக உள்ளார். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் இரண்டு படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால், ஏ.ஆர். முருகதாஸ் உடன் அவர் இணைந்து பணியாற்றி வரும் 23 வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது. 24 வது படம் குறித்த அப்டேட்டும் கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த தகவல்கள் பலருக்கும் தெரிந்தது தான். சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிவாஜி ரசிகர்களே இந்த டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என அறிக்கைகள் வெளியிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் படத்திற்கு உரிய முறையில் உரிமைகளை வாங்கி, பராசக்தி என பெயர் சூட்டியுள்ளனர். படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில்,ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது கிறிஸ்துமஸ்க்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சுதா கொங்கரா: இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ மற்றும் வாழ்த்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக அவர் பகிர்ந்துள்ள வீடியோ மாஸாக இருப்பதால், ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும், இது எல்லாம் சூர்யாவுக்கு கிடைக்க வேண்டியது. சூர்யா இதை மிஸ் செய்துவிட்டார். பராசக்தி ஹீரோவான சிவகார்த்திகேயனை சுதா கொங்கரா எப்படி செதுக்குகிறார் பாருங்கள் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். முதலில் இந்த படத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆனார். அதன் பின்னர் சில காரணங்களால் அவர் விலக, தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சூர்யா நடிக்க கமிட் ஆன போது இந்தப் படத்தின் பெயர் புறநானூறு என இருந்தது.
சிவகார்த்திகேயன்: மேலும் தனது பிறந்த நாள் வாழ்த்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹீரோ சிவகார்த்திகேயன். உங்களுடன் பணியாற்றுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த பயணமும் இந்த பயணத்தில் உங்கள் ஈடுபாடு மேலும் சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது" என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒவ்வொரு காட்சியிலும் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனுக்கு ஒவ்வொரு காட்சியிலும் நடிக்க கற்றுக் கொடுக்கிறார். அது தொடர்பான வீடியோவில் சிவகார்த்திகேயன் லுக்கும், அவர் நடித்துக் காட்டுவது பிரமாதமாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

சம்பளம்: அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் என்பது முற்றிலும் மாறிவிட்டது. தனது சம்பளத்தை சிவகார்த்திகேயன் சுமார் 70 கோடிகள் வரை உயர்த்தி விட்டார் என கூறப்படுகிறது. மேலும் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வெளியானால், சம்பளம் மேலும் அதிகரிக்கவும், 25வது படத்திற்குப் பிறகு சம்பளத்தை கிட்டத்த 120 கோடிகளுக்கு மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











