அஜித்தை இயக்குகிறாரா சூரரைப் போற்று டைரக்டர்? ஜிவி பிரகாஷின் கொல மாசு அப்டேட்!
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது வலிமை படம்.
இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார் அஜித்.
இதனிடையே, அடுத்த படத்தில் அவர் சூரரைப் போற்று டைரக்டருடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் வலிமை படம்
நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிப்பில் கடந்த 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது வலிமை. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் பான் இந்தியா படமாக வெளியானது. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் படம் பிரம்மாண்டமான அளவில் ரிலீசானது.

சில தினங்களில் ஏகே61 படப்பூஜை
படம் ஒரே வாரத்தில் 200 கோடி ரூபாயை உலகெங்கிலும் வசூல் செய்துள்ளது. மேலும் வாரயிறுதி நாட்களில் மட்டுமின்றி வார நாட்களிலும் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து வசூல் மழையை பொழிந்து வருகிறது வலிமை. இதனிடையே அஜித் -வினோத் -போனி கபூர் மூன்றாவது முறையாக இணையும் அஜித் 61வது படத்தின் பூஜை இன்னும் சில தினங்களில் போடப்பட உள்ளது.

19ம் தேதி சூட்டிங்?
சென்னையில் இதன் பூஜை வரும் 9ம் தேதியும், சூட்டிங் ஐதராபாத்தில் வரும் 19ம் தேதியும் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூட்டிங் துவக்கத்தின்போதே படத்தின் டைட்டிலும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் பெயர் வல்லமை-யாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் புதிய கெட்டப்
நேர்கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையவுள்ள இந்த கூட்டணி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அஜித்தின் கெட்டப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் போனி கபூர் வெளியிட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் அஜித்தை இந்த கெட்டப்பில் காண முடிந்தது.
Recommended Video

சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித்?
இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளி ரிலீசாக வெளியிடவும் போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அஜித்தின் அடுத்தப்படம் குறித்த தகவல்களும் இணையதளத்தில் முற்றுகையிட்டு வருகிறது. அடுத்ததாக சூரரைப் போற்று என்ற வலிமையான படத்தை கொடுத்த சுதா கொங்குரா இயக்கத்தில் அஜித் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் அப்டேட்
ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இதனை தெரிவித்துள்ளார். அஜித் -சுதா கொங்குரா படம் அமைய வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு படம் அமையும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் படம் எடுக்கப்பட வேண்டும் என்று தானும் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











