»   »  உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, இயக்குனர் ஷங்கருக்கு 2 பக்கமும் இடியா இருக்கே!

உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, இயக்குனர் ஷங்கருக்கு 2 பக்கமும் இடியா இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படத்தில் கெட்ட விஞ்ஞானியாக வருவது அக்ஷய் குமார் அல்ல நான் தான் என பாலிவுட் நடிகர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், சுதான்ஷு பாண்டே உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 2.0. இதில் எந்திரன் படத்தில் இறந்த விஞ்ஞானி டாக்டர் போஹ்ராவின் மகனாக அக்ஷய் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து சுதான்ஷு பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார் அல்ல நான் தான் விஞ்ஞானி. நான் தான் டாக்டர் போஹ்ராவின் மகனாக நடிக்கிறேன். எனக்கும் அக்ஷய் குமாருக்கும் இடையே சண்டை காட்சி உள்ளது. அந்த காட்சி அருமையாக வந்துள்ளது.

ரஜினி

ரஜினி

எனக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் இடையே எந்த சண்டை காட்சியும் இல்லை. ஆனால் நான் அவருடன் சேர்ந்து வரும் காட்சிகள் உண்டு. நான் வில்லன் தான் ஆனால் வழக்கமான வில்லன் இல்லை என்றார் சுதான்ஷு.

ஷங்கர்

ஷங்கர்

படம் குறித்த விபரங்கள் வெளியாகக் கூடாது என்பதில் ஷங்கர் குறியாக உள்ளார். ஒரு பக்கம் சுதான்ஷு பட விபரங்களை வெளியிட்டு ஷங்கரை கடுப்பேற்றியுள்ளார். மறுபக்கம் ஏமி அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு ஷங்கருக்கு தலைவலியாக உள்ளார்.

பாராட்டு

பாராட்டு

சுதான்ஷு பட விபரங்களை வெளியிட்டாலும் கூடவே ஷங்கரையும் புகந்து தள்ளியுள்ளார். சுதான்ஷு பில்லா 2 படத்தில் அஜீத் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: shankar, ஷங்கர்
English summary
Sudhanshu Pandey has revealed his character in Rajinikanth starrer 2.0 being directed by Shankar.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil