»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சரத்குமார் தான் என் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார் என்று, சரத்குமாரின் அண்ணனும், நாடார் இளைஞர் பேரவைத் தலைவருமான சுதர்ஸன்பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சுதர்ஸன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சரத்குமார் சினிமாவுக்கு வரு முன்பே நான் அரசியல் வாழ்விலும், பொது வாழ்விலும் ஈடுபட்டுள்ளேன். அப்போது சரத்குமார் என்றால் யாருக்கும்தெரியாது. அப்போது அவர் என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வந்தார்.

டிகர் சரத்குமார் நாடார் இன மக்களுக்கு உதவிகள் எதுவும் செய்யாமல் துரோகம் செய்து வந்ததால்தான் அவரை, சொந்த இன மக்களே தேர்தலில்தோற்கடித்தனர்.

சரத்குமார் தனது அறிக்கைக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடிகரின்பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.

சூரியவம்சத்தின் பெரிய நாட்டாமை என்ற பட்டம் எனக்கு, அவர் நடித்த சூரிய வம்சம் படம் வெளிவருமுன்பே தரப்பட்டு விட்டது. அதைப் பார்த்துத்தான்அவர்கள் சூரிய வம்சம் என்று பெயர் வைத்தார்கள்.

சரத்குமார் தன்னைப் பெரிய மக்கள் தலைவராக நினைத்துக் கொண்டிருக்கிறார். சினிமா நடிகர்கள் யாரைப் பார்த்தாலும் மக்கள் கூட்டம் கூடும்.வையாபுரி, வடிவேலு, தவக்களை கிங்காங்க் போன்றவர்களைப் பார்க்கவும் மக்கள் கூட்டம் கூடும். மக்கள் கூட்டம் கூடுவதால் அவர்கள்அனைவரும் மக்கள் தலைவர் ஆக முடியுமா?

இவ்வாறு சுதர்ஸன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் அண்ணன் சுதர்ஸன் என் பெயரைப் பயன்படுத்தி என் புகழுக்குக்களங்கம் விளைவித்து வருகிறார். அவர் இனிமேல் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil