twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திடீர் நெஞ்சுவலி.. பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்!

    By
    |

    கொச்சி: மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதில் சினிமாதுறையும் ஒன்று.

    இதனால் கோடிகளை தங்கள் படங்களில் போட்டு முடக்கி வைத்திருந்த தயாரிப்பாளர்கள் கவலை அடைந்தனர்.

    ஓடிடி தளங்கள்

    ஓடிடி தளங்கள்

    பின்னர் சில தயாரிப்பாளர்கள் தங்க படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்தனர். அதன்படி சில படங்கள் ஓடிடியில் வெளியாகின. அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்து மொழி படங்களுக்குமே ஓடிடியில் வெளியிடப்பட்டன.

    சூஃபியும் சுஜாதாயும்

    சூஃபியும் சுஜாதாயும்

    அதன்படி ஓடிடியில் வெளியான முதல் மலையாள படம், சூஃபியும் சுஜாதாயும். கடந்த ஜூலை மாதம் அமேசானில் இந்தப் படம் வெளியானது. இதில் ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். இதை இயக்கியவர் நரனிபுழா ஷாநவாஸ். இந்தப் படம் அதிகம் கவனிக்கப்படவில்லை.

    ஸ்கிரிப்ட் வேலை

    ஸ்கிரிப்ட் வேலை

    இந்நிலையில், ஷாநவாஸ் தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையை ஈடுபட்டு வந்தார். இதற்காக அட்டப்பாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஷாநவாஸுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள்,
    கோயமுத்தூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்தனர்.

    செயற்கை சுவாசக்கருவி

    செயற்கை சுவாசக்கருவி

    அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மலையாள
    திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    'Sufiyum Sujatayum' filmmaker Shanavas in ICU after cardiogenic shock
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X