ப்பா.. என்னா ரியாக்ஷன்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? வைரலாகும் வாரிசு நடிகையின் செல்பி போட்டோ!
ஷாரூக் மகள் சுஹானாவின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: ஷாருக் மற்றும் அவரது மகள் சுஹானாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அவருடன் மனைவி கவுரி கான், மகள் சுஹானா, மகன்கள் ஆர்யன் மற்றும் ஆப்ராம் என அனைவரும் சென்றிருந்தனர்.
அப்போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷாருக்கும், கவுரியும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, சுற்றுலா செல்ல மாலத்தீவு தான் சரியான இடம் என ஷாருக் குறிப்பிட்டிருந்தார்.
என் உலகம்:
அதேபோல் அவரது மனைவி கவுரி கான், மகள் சுஹானா, மகன்கள் ஆர்யன், ஆப்ராம் ஆகியோர் ஒரு படகில் செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு, 'என்னுடைய மூன்று பிள்ளைகள்.. என் உலகம்' என குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த புகைப்படங்களை எல்லாம்விட, ஒரு புகைப்படம் இணையத்தையே கலக்கியுள்ளது.
செல்பி:
குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில், பின்புறத்தில் ஷாருக் நிற்க, மகள் சுஹானா தனது செல்போனில் செல்பி எடுக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் எனக் கேட்கிறீர்களா... இருக்கு நிச்சயம் விஷயம் இருக்கு. அந்த புகைப்படத்தில் சுஹானா கொடுக்கும் எக்ஸ்பிரஷன் தான் போட்டோ வைரலாக காரணம்.

கமெண்ட்:
சுஹானா யாரைப் பார்த்து இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார் என தெரியவில்லை. ஆனால் அவருக்கு பின்னால் இருப்பது அவரது தந்தை ஷாருக் தான். "இந்த எக்ஸ்பிரஷனை பார்த்தா ஏதோ தப்பா தெரியுதே", ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

மகளின் ஆசை:
சுஹானாவுக்கு அப்பாவை போல் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. மிக விரைவில் அவர் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகன் ஆர்யன் கலிபோர்னியாவில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இளைய மகன் ஆப்ராம், மும்பையில் பள்ளி படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











