அட ஏங்க நீங்க.. "டாடி"க்கு மகளாக இருக்கவே கஷ்டமா இருக்கு.. சொல்றது யார் பாருங்க!

ஷாருக்கானின் மகள் சுகானா கான் முதல் போட்டோஷூட்டை முடித்துள்ளார்.

Recommended Video

ஷாருக்கானின் மகள் அவரை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?- வீடியோ

மும்பை: ஷாருக்கானின் மகளாக இருப்பது மிகக் கடினமான விஷயம் என சுகானா கான் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய இடத்தில் உள்ள நடிகர் ஷாருக்கான். இவருடைய மகள் சுகானா கான் ஷாருக்கானின் மகளாக இருப்பது மிகவும் கடினமான விஷயம் எனத் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கானின் மகள் சுகானா கான் பிகினியில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமீபத்தில் விமர்சனத்திற்குள்ளானார். 18 வயதாகும் சுகானா கான் தற்போது லண்டனில் படித்து வருகிறார்.

அனுபவம்

அனுபவம்

வோக் இதழுக்காக தன்னுடைய முதல் போட்டோ ஷூட்டில் சமீபத்தில் கலந்துகொண்டார் சுகானா கான். முதல் ஷூட் போல நடந்துகொள்ளாமல் அனுபவம் வாய்ந்த மாடலைப்போல் அவர் நடந்துகொண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.

 எளிதாக முடிந்தது

எளிதாக முடிந்தது

அதற்குப் பிறகு பேட்டியளித்த சுகானா, அந்த போடோ ஷூட் மிகவும் பிடித்திருந்ததாகவும், நிறைய எதிர்பார்ப்போடு வந்திருந்தேன் அவை அனைத்தையும் எளிதில் செய்து முடித்த ஒரு உணர்வு ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார்.

 டான்ஸ் ஷூட்

டான்ஸ் ஷூட்

தனக்கு நடனமாடுவது மிகப் பிடிக்கும் எனவும், அதை உணர்ந்து பெற்றோர்கள் வெளிக்கொண்டு வந்தபோது சிறப்பாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார். நடனமாடுவதுபோல் ஷூட் செய்தது மிகவும் பிடித்திருந்ததாகவும் சுகானா கூறினர்.

 ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

16 வயதிலேயே வீட்டை விட்டுப் பிரிந்து வெளியில் சென்றது மிகச்சிறப்பான விஷயம் எனக்கூறும் சுகானா அதனால் பல வித்தியாசமான அனுபவங்களைப் பெறமுடிந்தது என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்.

 மகளாக இருப்பது கஷ்டம்

மகளாக இருப்பது கஷ்டம்

மும்பையில் என்னால் சாதாரணமாக வெளியில் சுற்றமுடியாது. ஷாருக்கான் மகள் எனக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஷாருக்கானின் மகளாக இருப்பது மிகவும் கஷ்டம். ஆனால் வெளிநாடுகளில் அப்படி இல்லை எனக் கூறினார்.

கவனம்

கவனம்

சுகானா ஐந்து வயது சிறுமியாக இருந்தபோது, தினமும் ஷாருக்தான் பள்ளியில் ட்ராப் செய்வாராம். அப்போது யாரும் ஷாருக்கானை எல்லோரும் உற்று கவனிப்பார்களாம். அவர் எப்போதும் தன்னை சுகானாவின் அப்பா என்று சொன்னதில்லையாம். ஆனால், அதைத்தான் சுகானா ஆசைப்பட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X