Suhana Khan: மகனுக்கு சரக்கு கம்பெனி.. மகளுக்கு மேக்கப் கம்பெனி.. நெப்போடிச சர்ச்சையில் ஷாருக்கான்!
மும்பை: தனது மகனையும் மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் இருந்தாலும் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பயங்கரமான நெப்போடிச சர்ச்சை தற்போது பாலிவுட்டில் வெடித்துள்ளது.
1991ம் ஆண்டு நடிகை கவுரி கானை திருமணம் செய்து கொண்டார் ஷாருக்கான். அந்த தம்பதியினருக்கு ஆர்யான் கான், சுஹானா கான் மற்றும் ஆப்ராம் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் மூத்த மகன் ஆர்யன் கான் புதிய சரக்கு பிராண்ட் நிறுவனத்தை ஆரம்பித்து பார்ட்டி வைத்த நிலையில், தற்போது ஷாருக்கானின் மகள் சுஹானா கான் சர்வதேச மேக்கப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறி உள்ளது பலரையும் கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஷாருக்கான் செல்வாக்கு: பாலிவுட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் நடிகர் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தனது மகன் ஆர்யான் கானை பெரும் போராட்டமே நடத்தி குற்றமற்றவர் என நிரூபித்து காப்பாற்றினார்.
பல நூறு கோடிகளுக்கு சொந்தக்காரரான ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸ் வெற்றி அடைந்தது மட்டுமின்றி அமீர் கான், அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் போன்றவர்களால் காப்பாற்ற முடியாத பாலிவுட்டின் பரிதாப சூழலை மீண்டும் தனது ரசிகர்கள் படை மூலம் தூக்கி நிறுத்தி உள்ளார் ஷாருக்கான்.
சரக்கு சாம்ராஜ்யத்தை ஆரம்பித்த மகன்: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் D'Yavol எனும் புதிய சரக்கு சாம்ராஜ்யத்தையே சமீபத்தில் தந்தையின் தயவால் படு ஜோராக ஆரம்பித்து டிவி நடிகைகளை எல்லாம் அழைத்து விடிய விடிய சரக்கு பார்ட்டி நடத்திய போட்டோக்களும் வீடியோக்களும் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், அடுத்ததாக ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் லைம் லைட்டில் அதுவும் சர்வதேச அளவில் டிரெண்டாகும் அளவுக்கு ஒரு பெரிய சம்பவத்தை செய்திருக்கிறார்.
மகளுக்கு மேக்கப் கம்பெனி: இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக போட்டோக்களை போட்டு அடிக்கடி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து 3 மில்லியன் ஃபாலோயர்களை சொந்தமாக கொண்டிருக்கும் சுஹானா கான் நெட்பிளிக்ஸின் ஆர்ச்சிஸ் எனும் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் அது வெளியாகும் முன்னதாகவே, நியூயார்க்கை சேர்ந்த சர்வதேச மேக்கப் நிறுவனமான Maybelline நிறுவனத்தின் விளம்பர தூதுவராக மாறி உள்ளார் சுஹானா கான்.
சிகப்பு நிற உடையில் அப்படியே லிப்ஸ்டிக் போல தற்போது விளம்பர தூதுவராக அறிவிக்கப்பட்ட சந்தோஷத்தை சுஹானா கான் வெளிப்படுத்தும் வீடியோக்கள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தீயாக டிரெண்டாகி வருகின்றன. #SuhanaKhan ஹாஷ்டேக்கில் ஷாருக்கானின் மகளின் வீடியோக்கள் வலம் வருகின்றன.
நெப்போடிசம் சர்ச்சை: என்னதான் ஒரு பக்கம் பாராட்டுக்கள் சுஹானா கானுக்கு குவிந்தாலும், நெப்போடிச சர்ச்சை பெரியளவில் தற்போது வெடித்துள்ளது. நடிகர் ஷாருக்கானின் இன்ஃப்ளூயன்ஸ் தான் அவரது வாரிசுகளுக்கு இதுபோன்ற பெரிய பெரிய வாய்ப்புகள் குவியக் காரணம் என்றும் அவுட்சைடர்ஸ் இங்கே என்னதான் திறமை இருந்தாலும், நடிக்கக் கூட சரியான வாய்ப்புக் கிடைக்காமல் அவதிப்படுகிறோம் என சில பிரபலங்களே வெறுப்பை வாரி இரைத்து வருகின்றனர்.

ஷாருக்கான் மகள் என்பதை தவிர்த்து சுஹானா கானுக்கு என்ன தனித் தகுதி இருக்கு? எப்படி சர்வதேச அழகு சாதன நிறுவனம் அவரை விளம்பர தூதுவராக பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இப்படியொரு வாய்ப்பை கொடுத்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications