»   »  நீச்சல் குளத்தில் பிகினியில் சூப்பர் ஸ்டார் மகள்: வைரலான புகைப்படம்

நீச்சல் குளத்தில் பிகினியில் சூப்பர் ஸ்டார் மகள்: வைரலான புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா விரைவில் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அவர் பிரபல இயக்குனரின் அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.

இதையடுத்து சுஹானா நடிகையாகப் போகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

நடிகை

நடிகை

பள்ளியில் படிக்கும் சுஹானா நாடகங்களில் கலந்து கொண்டு நடிக்கிறார். அப்படி அவர் நடித்த நாடக வீடியோவை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் சுஹானாவின் நடிப்பு திறமையை பாராட்டினார்கள்.

பிகினி

பிகினி

சுஹானா தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்து பலரும் சுஹானாவின் அழகை புகழ்ந்துள்ளனர்.

அழகு

அழகு

பார்ட்டிகளுக்கு சுஹானா டிசைனர் உடைகள் அணிந்து வருகிறார். அவர் அழகாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். ஆனால் சில சேட்டைக்கார நெட்டிசன்களோ அவர் ஷாருக்கான் பெண் வேடம் போட்ட மாதிரி இருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார்கள்.

சாரா

சாரா

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா ஆகியோர் நடிக்க வந்துவிட்டார்கள். அடுத்து சுஹானா ஹீரோயினாக அறிமுகமாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The scorching summer heat is too much to handle and Shahrukh Khan's daughter Suhana along with her friend chilled by the pool sporting a swimsuit and the pictures went viral all over the Internet in a jiffy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X