குஷ்பு மகள் கல்யாணத்துல கூட சிரிச்சு சந்தோஷமா பேசினாரே பாக்யராஜ்.. இன்னைக்கு காலையில கூட - சுஹாசினி
சென்னை: நேற்று முன் தினம் கோவாவில் நடைபெற்ற குஷ்பு மகளின் திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்ற பாக்யராஜ் இரவே கிளம்பி விட்டார். நாங்கள் நேற்று மாலை தான் வந்தோம். ஆனால், அதற்குள் இப்படி ஆகும் என யாருமே நினைத்துப் பார்க்கவில்லை என நடிகை சுஹாசினி பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கோயமுத்தூரில் உள்ள வெள்ளங்கோயில் எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் பாக்யராஜ். ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக ஆரம்ப காலத்தில் பணியாற்றினார்.

இவரது எழுத்து திறமையை பார்த்து வியந்த பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் ஒரு சிறிய ரோலிலும் நடிக்க வைத்து சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
ஹீரோவான பாக்யராஜ்: 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராகவும் ஒரு சின்ன ரோலிலும் நடிக்கத் தொடங்கிய பாக்யராஜ் தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயிலே, சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். நாமும் ஹீரோவாகலாம் என்கிற நம்பிக்கை வந்ததும் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் 1979ம் ஆண்டு ஹீரோவாக ஆனார். தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னர் என கொண்டாடப்பட்ட பாக்யராஜ் இன்று காலை உயிரிழந்தது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாக்யராஜின் கடைசி நிமிடங்கள் பற்றி சுஹாசினி: இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி குஷ்பு மகள் திருமணத்தில் கூட பாக்யராஜ் பங்கேற்றது குறித்தும் அனைவரிடமும் சிரித்துப் பேசி சந்தோஷமாகவே இருந்தார் என்றும் இன்று காலை கூட வாக்கிங் சென்றார். வாக்கிங் போய்விட்டு வந்த உடனே நெஞ்சு வலிக்குது என்ற சொன்னவுடனே அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி வரைக்கும் நம்மை சிரித்த முகத்துடன் சிரிக்க வைத்த மனிதர் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டுமெ ந இரங்கல் தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி: பார்த்திபன், பாண்டியராஜன் என பலர் பாக்யராஜின் உதவி இயக்குநர்களாக இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் இயக்குநர்களாகவும் வளர்ந்தவர்கள். முதல் ஆளாக தனது குருநாதருக்கு மரியாதை செலுத்த அவர்கள் வந்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications