»   »  கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரானார் சுஹாசினி!

கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரானார் சுஹாசினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்சம்பர்க் நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நடிகை சுகாசினி நேற்று நியமிக்கப்பட்டார்.

'கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்' நாட்டின் தூதர் சாம் ஸ்ரீநர் முறைப்படி சுஹாசினிக்குகு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, விழாவில் அதிகாரப்பூர்வ தூதர்கள் மற்றும் கார்ப்பரேட் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் இந்த பதவியேற்பு விழா நேற்று நடைப்பெற்றது.

Suhasini is now become the ambassador of Luxembourg

விழாவை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்த சாம் ஸ்ரீநர், சுஹாசினியை தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராக நியமித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

'சுஹாசினி 350 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் பெண்கள் நலனிலும் ஆர்வம் கொண்ட பன்முக சிந்தனையாளர். சுஹாசினியை அதிகாரப்பூர்வ தூதராக நியமித்ததால் இந்தியா மற்றும் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டினுடனான உறவு மேலும் மேம்படும்' என்றும் சாம் ஸ்ரீநர் நம்பிக்கை தெரிவித்தார்.

Suhasini is now become the ambassador of Luxembourg

பதவியேற்ற பின் பேசிய சுஹாசினி, தன்னை தூதராக நியமித்ததற்கு நன்றி கூறினார். தான் பிறந்த பரமக்குடி என்ற சிறிய ஊருடன் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்கை ஒப்பிட்ட பேசிய சுஹாசினி மணிரத்னம், தனக்கு அளித்த பொறுப்பை செவ்வனே செய்வேன் என்று உறுதியளித்தார்.

ஒரு நடிகர் மற்றொரு நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராவது இதுவே முதல் முறை

என்பது குறிப்பிடதக்கது.

English summary
Popular film Actor and Social Activist, Suhasini Mani Ratnam is now the Honorary Consul of the Grand Duchy of Luxembourg with consular jurisdiction over the States of Tamilnadu and Kerala. The Oath Ceremony was held yesterday in a Star Hotel in Chennai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil