திருமணமான போது மணிரத்னம் அக்கவுண்டில் வெறும் 15,000 தான் இருந்தது..கணவரின் மானத்தை வாங்கிய சுஹாசினி!
சென்னை : திருமணமான புதிதில் மணிரத்னம் அக்கவுண்டில் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் இருந்தது என்று நிகழ்ச்சி ஒன்றில் சுஹாசினி பேசி உள்ளார்.
கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசனின் மகள் தான் சுஹாசினி. தனது சித்தப்பாவை போல சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

80 மற்றும் 90களில் தமிழில், விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ், மோகன், சிவக்குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
திறமையான நடிகை : நடிகை சுஹாசினி நடிகை என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார். உதிரிப்பூக்கள் படத்தில் கேமரா அசிஸ்டன்டாக தனது பணியைத் தொடங்கினார். அதன் பிறகு காளி, ராஜபார்வை, மீண்டும் கோகிலா படத்தில் கேமரா அசிஸ்டன்டாக இருந்த இவர் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்துக்கே சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது.
பல மொழிபடங்களில் : முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, மலையாளம் கன்னட, இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து பெயர் எடுத்தார். கே பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் நந்தினி என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றார். சுஹாசினி நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி படங்கள் என்றுமே எவர் கிரீன் படங்களாக இருக்கும்.

காதல் திருமணம் : நடிகை சுஹாசினி இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் பணியாற்றிய போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட அதுவே பின்னாளில் காதலாக மாறி இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான இருக்கும் இவர்களுக்கு நந்தன் என்கிற மகன் இருக்கிறார்.
தொடர்ந்து பிஸி : திருமணமத்திற்கு பிறகும் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரம், அம்மா, அண்ணி போன்ற ரோல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், தொலைக்காட்சிகளில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை எடுத்த பேட்டி இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

அக்கவுண்டில் வெறும் 15000 ரூபாய் :அண்மையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய சுஹாசினி, திருமணம் ஆன புதிதில் என் கணவரை விட மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தேன். எங்களுக்கு திருமணம் நடக்கும் போது மணி அக்கவுண்டில் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது, அப்போது தான் அக்னி நட்சத்திரம், நாயகன் படங்கள் வெளியாகி வளர்ந்து வரும் இயக்குநராக இருந்தார். ஆனால், நான் அவரை விட பிரபலமான நடிகையாக இருந்தேன் என்று பேசி உள்ளார். இதைப்பார்த்த பல நெட்டிசன்ஸ் கணவரின் மானத்தை இப்படியா வாங்குவீங்க என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











