Don't Miss!
- News
யார் இந்த கே.எஸ்.தென்னரசு? அதிமுகவில் கடந்து வந்த பாதை என்ன? எடப்பாடி டிக் செய்தது எப்படி?
- Technology
84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Airtel இன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிரஞ்சீவி சுஹாசினி இணையும்.. லூசிபர் தெலுங்கு ரீமேக்!
ஹைதராபாத் : மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்த படம் லூசிபர் தற்போது தெலுங்கில் உருவாக உள்ளது.
இந்த படத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சுஹாசினி மணிரத்னம் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நைராவுடன் கொஞ்சி விளையாடும் சமீரா..க்யூட்டான போட்டோஸ் !

வெற்றி பெற்றது
மலையாளத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்டு முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் எண்ணற்ற படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஐயப்பனும் கோஷியும் படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஸ்டைலிஷ் வில்லனாக
தமிழில் பிரபல இயக்குனர் கே வி ஆனந்தின் முதல்படமான கனா கண்டேன் படத்தின் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக அறிமுகமாகி அனைவரையும் மிரட்டி வந்தார் பிரித்விராஜ். அதைத்தொடர்ந்து ராவணன், மொழி, பாரிஜாதம் போன்ற தமிழ் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், நடிப்பில் மிகச் சிறந்து விளங்கிய இவருக்கு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

வசூல் மழையை
இவ்வாறு நடிப்பில் சிறந்து விளங்கும் பிரித்விராஜ் முதன்முதலாக லூசிபர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். 2019ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கிய முதல்படமான லூசிபர் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூல் மழையை பொழிந்தது.

மிகப்பெரிய வரவேற்பு
இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓப்ராய், டோவினோ தாமஸ் போன்ற பல முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ள இந்த படம் மலையாள ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வந்தது. பின் இந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

தெலுங்கில் சிரஞ்சீவி
அரசியலை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இது தெலுங்கில் உருவாக உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதலில் விஜயசாந்தி
இந்த நிலையில் லூசிபர் படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கில் யார் நடிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் முதலில் நடிகை விஜயசாந்தி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

ஓகே சொல்லிவிட்டாராம்
பின் அவர் இந்த படத்தில் இருந்து ஒரு சில காரணங்களால் விலகி விட்டதால் தற்பொழுது சுஹாசினியை படக்குழு அணுகி உள்ளது. படத்தின் கதையை கேட்ட சுஹாசினி, இந்த கதை பிடித்து போக உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம். எனினும் இதை பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் ஆகஸ்டில் வெளிவரும் என சொல்லப்பட்டு வருகிறது.

ராம் சரண்
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாக்ஸ் ஆபீசை நிரப்பிய இந்தப் படத்தை சாஹோ என்ற மிகப்பெரிய படத்தை இயக்கிய இயக்குனர் சுஜீத் இயக்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கோனிடேல என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. லாக்டவுன் சூழ்நிலையில் படப்பிடிப்புக்கள் ஏதும் நடத்த முடியாததால் இந்த வருட இறுதியில் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என இந்த படக்குழு நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறது.