Sarath Babu death reason: சரத்பாபு உயிரிழக்க காரணமான Multiple Myeloma.. சுஹாசினி சொன்ன ஷாக் தகவல்!
சென்னை: நடிகர் சரத்பாபு மல்டிபிள் மைலோமா (Multiple Myeloma) எனும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என நடிகை சுஹாசினி மணிரத்னம் அதிர்ச்சி தகவல் கூறி உள்ளார்.
நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து வரும் சுஹாசினி மணிரத்னம் செய்தியாளர்களை சந்தித்த போது இதுகுறித்து பேசினார்.

சுமார் 3 மாத காலமாக உடல்நலக்குறைவு காரணமாக கடும் அவதி அடைந்து வந்தார் சரத்பாபு என்றும் அவரை பற்றி பல விஷயங்களை ஷேர் செய்துள்ளார் சுஹாசினி.
சரத்பாபு உயிரிழக்க இதுதான் காரணம்: சுமார் 92 நாட்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார் சரத்பாபு என சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சரத்பாபுவின் உறவினர்கள் பலரும் பெங்களூருவில் இருந்து வந்த நிலையில், சாதாரண காய்ச்சல் என்று தான் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரம். அதன் பின்னர் நோய் தீவிரம் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு மல்டிபிள் மைலோமா நோய் காரணமாகத் தான் உயிரிழந்தார் எனக் கூறியுள்ளார்.

மல்டிபிள் மைலோமா என்றா என்ன?: எலும்பு மஜ்ஜையின் பிளாஸ்மா செல்களில் உருவாகும் புற்றுநோய் மல்டிபிள் மைலோமா ஆகும். மைலோமா என்பது ஒரு வகை இரத்த புற்றுநோயாகும், இது எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்களை, குறிப்பாக பிளாஸ்மா செல்களை பாதிக்கிறது. இப்படியொரு பாதிப்பால் தான் கடந்த 3 மாதங்களாக சரத்பாபு அவதிப்பட்டு வந்தார் என்றும் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து சுஹாசினி மணிரத்னமும் மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில் மருத்துவர்கள் இதனை தெரிவித்ததாக சுஹாசினி கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
எந்த கெட்ட பழக்கமும் இல்லை: ரஜினிகாந்துக்கு மட்டுமில்லை, கமல்ஹாசன், எனக்கு என சினிமாவில் எல்லாருக்குமே நல்ல நண்பராக இருந்து வந்தவர் சரத்பாபு. சரத்பாபுவின் நிலை அறிந்த உடனே ரஜினியும் கமலும் என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்க செய்றோம் என்றனர். ஆனால், சரத்பாபுவின் குடும்பத்தில் மொத்தம் 13 பேர் இருக்காங்க, அவங்க எல்லாருமே அவரை ரொம்பவே நல்லா பார்த்துக்கிட்டாங்க, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் சரத்பாபு. முறையாக உடற்பயிற்சியை தினமும் செய்வார். அவருக்கு ஒரு முறை காலில் சின்னதாக அடிபட்டது. அதனை கவனிக்காமல் விட்டு விட்டார். அதன் பிறகு தான் அவருக்கு ஒவ்வொரு பிரச்சனையாக ஏற்பட்டது எனக் கூறினார் சுஹாசினி. இன்று மதியம் கிண்டியில் உள்ள மயானத்தில் சரத்பாபுவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றார்.


Click it and Unblock the Notifications











