என்னது பொன்னியின் செல்வன் தெலுங்கு படமா? சுஹாசினி மணிரத்னம் பேச்சை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம் ஹைதராபாத்தில் நடந்த பிரஸ்மீட்டில் பேசிய பேச்சை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து அடுத்த சர்ச்சையை ஆரம்பித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து வேறலெவலில் செய்து வருகின்றனர்.

ஹாலிவுட்டில் பறந்த சோழர் கொடி
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள டிஜிட்டல் பில்போர்ட்களில் பொன்னியின் செல்வன் டிரைலரை ஒளிபரப்பி வருகின்றன. மேலும், சமீபத்தில் ஹாலிவுட் மலைக்கு மேல் பொன்னியின் செல்வன் டீம் பறக்கவிட்ட சோழர்களின் கொடி வீடியோ ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் மெய் சிலிர்க்க செய்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நம்ம ஊரில் கிடைக்கும் மரியாதையை போல சமீப காலமாக இந்திய படங்களை ஹாலிவுட் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

விக்ரம் பேச்சு
பொன்னியின் செல்வன் படத்தை சரியான முறையில் புரமோட் செய்ய சியான் விக்ரம், ஏ.ஆர். விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பல்வேறு நகரங்களிலும் சிறப்பாக பேசி வருகின்றனர். அதிலும், சியான் விக்ரம் தஞ்சை கோயிலின் சிறப்பையும் அதனை ராஜ ராஜ சோழன் கட்டிய விதத்தையும் பற்றி பேசியது உலகளவில் டிரெண்டாகி உள்ளது.

சர்ச்சையை கிளப்பிய சுஹாசினி
பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்தியா படம் என புரமோஷன் செய்யாமல், ஹைதராபாத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக இந்த படம் உங்களுடைய படம் என அவர் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ப்ளூ சட்டை மாறன் தற்போது அதனை ஷேர் செய்து அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கு படமா
"பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் அதிகம் நடந்துள்ளது. ஆகவே இது தெலுங்கு மக்களின் படம். இப்படத்தை நீங்கள்தான் வெற்றியடை செய்ய வேண்டும் - Suhashini at PS 1 Promo event in Andhra." என அவர் பேசிய வீடியோவையும் ஷேர் செய்து வெளுத்து வாங்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

புரமோஷனுக்காக
பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக உருவாகி உள்ள நிலையில், ஒவ்வொரு ஊருக்கும் படக்குழு செல்லும் போது, இது உங்க படம் தாங்க என்றும் உங்க படம் மாதிரி தான் என்றும் புரமோஷனுக்காக பேசுவது வழக்கம். அப்படி இல்லை என்றால், அந்த ஊர் ரசிகர்களை கனெக்ட் பண்ண படத்தில் என்ன விஷயம் இருக்கோ அதனை பேசுவார்கள். அதே போலத்தான் சுஹாசினியும் ஆந்திராவில் பேசியுள்ளார் என ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு பிரச்சனை ஓவர்
இரவின் நிழல் படத்திற்கு பிறகு பார்த்திபன் உடன் பெரும் சண்டையை ப்ளூ சட்டை மாறன் போட்டு வந்த நிலையில், அதன் பிறகு பார்த்திபன் அமைதி காத்ததும் அந்த பிரச்சனை முடிந்தது. அதே போல இறங்கி செய்வேன் என கெளதம் மேனன் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் பல ட்வீட்களை போட்டு கேள்வி எழுப்பி அசிங்கப்படுத்தி வந்தாலும், அதை கண்டுக்காமல் விட்டு விட்ட நிலையில், இந்த வார ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படம் பக்கம் தனது பார்வையை செலுத்தி உள்ளார் ப்ளூ சட்டை மாறன் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











