Suhasini: அந்த படத்தை நினைத்து வெட்கப்படுகிறேன்.. உடைத்து பேசிய சுஹாசினி!
சென்னை: இந்திரா படத்தில் சாதிப் பிரச்சனையை கையாண்ட விதம் குறித்து நான் வெட்கப்படுகிறேன் என்று சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
1995ம் ஆண்டு சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இந்திரா. இப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து வரவேற்பை பெற்றது.
சுஹாசினி இயக்கிய இந்திரா: இரண்டு கிராமத்திற்கு இடையே இருக்கும் சாதிவெறிக்கு எதிராக தனித்து போராடும் இந்திரா என்கிற பெண்ணின் கதையாகும். இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெறவில்லை. ஆனால், இந்திரா திரைப்படம் இரண்டு மாநில விருதுகளை வென்றது.
ABP Southern Rising Submit 2023: தெற்கின் எழுச்சி என்கிற தலைப்பின் கீழ் ABP Southern Rising Submit 2023 என்ற பெயரில் பிரம்மாண்ட கருத்தரங்கு சென்னையில் தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்து கொண்டனர்.

வெட்கப்படுகிறேன்: இதில் கலந்து கொண்ட சுஹாசினி இந்திரா திரைப்படம் தான் ஜாதி பிரச்சினையை கையாண்ட முதல் படம் என்றார். அந்தப் படத்தை உருவாக்கிய விதம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுஹாசினி, அந்த படத்தை உருவாக்கிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை, சாதி பிரச்சனையை மேம்போக்காக கையாண்டதை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றார்.
அவர்கள் சந்தித்த பிரச்சனை: மேலும், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் கடந்து வந்த பாதை, அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை அவர்களின் படத்தில் வெளிப்படுத்துகிறார்கள். நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்ததால், அதன் தாக்கம் எனக்கு தெரியவில்லை. இன்று, இந்த இளைஞர்கள் அவர்களின் கருத்துகளாலும் விளக்கங்களாலும் வெற்றியடைந்து வருகின்றனர் என்று நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











