Suhasini on KH 234 - மணிரத்னம் - கமலால் ஃபீல் ஆன சுஹாசினி.. என்ன காரணம் தெரியுமா?.. இப்படியும் இருக்காங்களே

சென்னை: Suhasini (சுஹாசினி) மணிரத்னத்தாலும் கமல் ஹாசனாலும் நடிகை சுஹாசினி ஒரு நிகழ்ச்சியில் ஃபீல் செய்து பேசியிருக்கிறார்.

கமல் ஹாசன் இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் கவனம் செலுத்தியிருந்தார். பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்த ரீ எண்ட்ரி அவருக்கு மாஸாக அமைந்துவிட்டது. படம் மெகா ஹிட்டாகி வசூலிலும் சாதனை படைத்தது. அந்த படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகம் அவரை அடுத்தடுத்து படங்களில் நடிக்க வைத்திருக்கிறது.

Suhasini Talks about Kamal And Maniratnam Movie

அடுத்தடுத்த படங்கள்: அதன்படி அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். நடிப்பில் மட்டுமின்றி தயாரிப்பிலும் பிஸியாகவே இருக்கிறார். அந்தவகையில் சிம்புவை வைத்து ஒரு படம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் ஆகியவற்றை தயாரித்தும் வருகிறார்.

சுஹாசினி பேட்டி: கமல் ஹாசனின் லைன் அப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம். ஏனெனில் இருவரும் இணைந்து ஏற்கனவே கொடுத்த நாயகன் படம் இன்றுவரை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கமல் ஹாசனின் அண்ணன் மகளும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி ஒரு தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமல் - மணிரத்னம் இணையும் படம் குறித்து பேசியிருக்கிறார்.

Suhasini Talks about Kamal And Maniratnam Movie

என்ன பேசினார்?: அந்த நிகழ்ச்சியில் பேசிய சுஹாசினி, "கமல் - மணிரத்னம் காம்போவில் உருவான நாயகன் திரைப்படம் எப்போதும் என்னுடைய ஃபேவரைட். நான் மணிரத்னத்தைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று அப்போது எனக்கு தெரியாது. ஒரு ரசிகையாக அவர்கள் இருவரும் மீண்டும் இணைவது எனக்கு சந்தோஷம்.

Suhasini Talks about Kamal And Maniratnam Movie

என்னிடம் சொல்வதில்லை: அந்தப் படம் பற்றிய விஷயங்களை நான் லீக் செய்துவிடுவேன் என என்னிடம் மணிரத்னம் எதனையுமே சொல்வதில்லை. ஆனால் விரைவில் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்போகிறது. கடந்த 42 வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் நடிப்பு எனக்கு சுலபம்தான். ஒரு ஷோ ஹோஸ்ட்டராக இருப்பதால் என்னால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.

ரிலாக்ஸ்தான்: கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதால் நாம் இன்னும் கொஞ்சம் பெட்டராக செய்திருக்கலாமோ என தோன்றும். ஆனால் என்னுடைய ஷோவுக்கு வரும் கெஸ்ட் அனைவரும் ரிலாக்ஸாகத்தான் இருப்பார்கள். அதை பார்க்கும்போது நான் நன்றாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் என தோன்றும். ஒரு இயக்குநராக நடிகர்களை இயக்குவது எனக்கு பிடிக்கும். எனக்கு எப்போதும் இயக்குநர் ரோல் பிடிக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X