Sarath babu Passed Away - கமல் ஏன் சரத்பாபு இறப்புக்கு வரவில்லை .. சுஹாசினி பதில்

சென்னை: Sarath babu Death(சரத்பாபு உயிரிழப்பு) சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்த கமல் ஹாசன் ஏன் நேரில் வரவில்லை என நடிகை சுஹாசினி தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கில் திரைப்பயணத்தை தொடங்கிய சரத்பாபு தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்தப் படத்தில் அவரது நடிப்பு திறமையை பார்த்த தமிழ் திரையுலகம் அவரை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து பல பட வாய்ப்புகளை கொடுத்தது. அப்படி அவர் நடித்த படங்களில் தனது திறமையை காண்பித்து அலட்டிக்கொள்ளாமல் நடித்தார்.

Suhasini Talks about why kamal haasan not attended the Sarth babus final funeral

கமல் ஹாசனுடன் நல்ல கெமிஸ்ட்ரி: கமல் ஹாசனுடனுன் சரத்பாபு சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, ஆளவந்தான், சட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் என இரு பெரும் ஹீரோக்களுடனும் நடித்து நல்ல நட்பை அவர்களுடன் வளர்த்திருந்தாலும் தன்னுடைய வாய்ப்புக்காக அவர்களை தொந்தரவு செய்யாதவர், ஈகோ பார்க்காதவர் என நல்ல பெயரையும் சரத்பாபு பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி ரொம்பவே சிம்ப்பிளானவர் என்றும் பலரால் புகழப்படுபவர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரத்பாபு: வயது மூப்பின் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பெங்களூருவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு சென்றார். அங்கு கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். விரைவில் உடல்நலம் தேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அவரது உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

கமல் ஹாசன் ஏன் வரவில்லை: சென்னையில் சரத்பாபுவின் உடலுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் கமல் ஹாசன் வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அஞ்சலி செலுத்த வந்த சுஹாசினியிடம் ஏன் கமல் ஹாசன் வரவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Suhasini Talks about why kamal haasan not attended the Sarth babus final funeral

அதற்கு பதிலளித்த அவர்,"சிரஞ்சீவி, கமல் ஆகியோரால் வரமுடியவில்லை .தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர். சரத்பாபுவின் இறுதி சடங்கை கமல் ஹாசன் உடன் இருப்பவர்கள் செய்து வருகின்றனர். கமல் ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் மேக்கப் போட்டுள்ளார். அதனுடன் வெளியே வர முடியாது என்பதால் தொலைபேசி வாயிலாக பேசினார்" என்றார்.

சரத்பாபுவுக்கு கமல் ஹாசன் இரங்கல்: முன்னதாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், "சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி" என குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X