இந்த அலி இருக்காரே... 10 வெண்ணிற ஆடை மூர்த்தி.. 110 தீப்பொறி ஆறுமுகத்துக்கு சமம்..!

ஹைதராபாத்: சைமா பட விழாவின்போது தெலுங்கு காமெடி நடிகர் அலி டபுள் மீனிங்கில் ஜோக் சொல்லி நடிகை சுஹாசினியிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

சைமா 2016 பட விழா சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்தது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தெலுங்கு நடிகர் அலி பேசிய பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. குறிப்பாக நடிகை சுஹாசினி பகிரங்கமாகவே அலியைக் கண்டித்துப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அலி வாயைத் திறந்தாலே!

அலி வாயைத் திறந்தாலே!

அலி வாயைத் திறந்தாலே பத்து வெண்ணிற ஆடை மூர்த்தியையும், 110 தீப்பொறி ஆறுமுகத்தையும் ஒரே சேர தரிசித்த எபக்ட் கிடைக்கும். அப்படி "ஏ" ஜோக்காக அடித்துத் தள்ளுவார்.

இடம் பொருள் ஏவல் கிடையாது

இடம் பொருள் ஏவல் கிடையாது

எந்த இடத்தில் அவர் இருந்தாலும், பேசினாலும் ஏ ஜோக்தான் முன்னாடி வந்து விழும். தெலுங்குப் பட ஆடியோ விழாக்களில் அலி வந்தாலே டபுள் மீனிங் பேச்சுக்கள் சரமாரியாக வந்து விழும். இதனால் பலமுறை விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளார் அலி. ஆனாலும் விட்டபாடில்லை.

இனிமே பேசப்படாது!

இனிமே பேசப்படாது!

இப்படி போகிற இடமெல்லாம் விமர்சனம் வந்ததால் ஒரு கட்டத்தில் அலிக்கே போரடித்துப் போய் இனி்மே இப்படியெல்லாம் பேச மாட்டேன் என்று சபதமே போட்டார். ஆனால் சபதம் போடுவதெல்லாம் அதை மீறுவதற்காகத்தானே.. அந்த வகையில் அலியின் ஏ ஜோக் பேச்சுக்களும் மீண்டும் தொடர ஆரம்பித்தன.

மனைவியுடன் வந்து மாட்டிக் கொண்டார்

மனைவியுடன் வந்து மாட்டிக் கொண்டார்

சைமா விருது விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட அலி, அங்கும் தனது "கய்யா முய்யா" பேச்சை அவிழ்த்து விட சிக்கலாகி விட்டது அதை பலரும் முகச் சுளிப்போடு பார்த்தனர். ஆனால் நடிகை சுஹாசினி தனது பேச்சில் அதை சுட்டிக் காட்டினார்.

சிரஞ்சீவியைப் பாராட்டிய போது

சிரஞ்சீவியைப் பாராட்டிய போது

விழாவில் நடிகர் சிரஞ்சீவி பாராட்டப்பட்டார். அப்போதுதான் அலி பேசும்போது தனது வழக்கமான டபுள் மீனிங் பேச்சை உதிர்த்தார். இதைக் கேட்டு அருகில் இருந்த சுஹாசினி கடுப்பாகி விட்டார்.

இப்படில்லாம் பேசாதீங்க

இப்படில்லாம் பேசாதீங்க

சுஹாசினி பேசும்போது அலி பேசிய எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால் அவர் பேசிய டபுள் மீனிங் பேச்சைத் தவிர. இனிமேல் அலி இதுபோல பேசக் கூடாது. பெண்களை சிறுமைப்படுத்துவது போல அவரது பேச்சு உள்ளது என்றார் சுஹாசினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X