»   »  கமலுக்கு அம்மாவாக நடிக்க கூப்பிட்டார்கள்! சுஹாசினி சித்தப்பா கமல்ஹாசனுக்கும், ரஜினி, விஜயகாந்த்துக்கும் அம்மாவாக நடிக்க என்னை சிலர் கூப்பிட்டார்கள். ஆனால் நான்மறுத்து விட்டேன் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அசோகமித்ரன். இதில் தனுஷின் பெற்றோர்களாக இயக்குனர் பாக்யராஜும், நடிகைசுஹாசினியும் நடிக்கிறார்கள். இப்படத்தின் அறிமுகத்திற்காக பாக்யராஜ், சுஹாசினி, தனுஷ் உள்ளிட்டோர் சென்னையில்செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களை சுஹாசினி செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அம்மா என்ற கேரக்டருக்குசினிமாவில் மரியாதையே கிடையாது. அதை ஒரு இரண்டாம் ரக கேரக்டராக, இழிவாகத் தான் பார்க்கிறார்கள். என்னை சிலர் அம்மா கேரக்டரில் நடிக்க அழைத்தார்கள். யாருக்குத் தெரியுமா? கமல்ஹாசனுக்கும், ரஜினி,விஜயகாந்த்துக்கும். கமலுக்கு போய் நான் எப்படி அம்மாவாக நடிக்க முடியும்? அவர் எனக்கு சித்தப்பா என்றுஎல்லோருக்குமே நன்றாகத் தெரியும்.இங்கு யாரும் எதற்கும் லாஜிக் பார்ப்பதில்லை, இது ஒரு கற்பனையான உலகம். மிகப் பெரிய அழகு தேவதையாக,ஹீரோயினாக நடித்தவர்கள் கூட இங்கு அம்மா வேடம் போட்டிருக்கிறார்கள். எனக்கு தனுஷை ரொம்பப் பிடிக்கும். நான் தனுஷின் அம்மாவாக நடிக்கப் போகிறேன் என்று என் மகனிடம் கூறியபோதுஅவன் பொறாமைப்பட்டான். எனது 25வது வருட திரையுலக வாழ்க்கையில் இப்பட வாய்ப்பு வந்துள்ளது.சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஓடிவிட்டதே என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 250படங்களில் நடித்து விட்டேன். இதில் தாய்மொழியான தமிழை விட தெலுங்குப் படங்களே அதிகம். கேமரமேன் அசோக்குமாரிடம் கேமரா பயின்ற நான் நடிகையாக மாறியது சுவாரஸ்யமான அனுபவம். பாக்யராஜுடன்மட்டும் இதுவரை நடிக்காமல் இருந்தேன். சொல்லப் போனால் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்திலேயே நான் ஜோடியாகநடித்திருக்க வேண்டும். ஆனால் முடியாமல் போய் விட்டது. அந்தப் படத்தில் நடித்த எனது தோழி பூர்ணிமா, பாக்யராஜுக்கு உண்மையிலேயே டார்லிங் ஆகி விட்டார் என்றார் சுஹாசினி. தனுஷ் கூறியபோது, பாக்யராஜ்-சுஹாசினியின் மகனாக நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இருவரும் எனக்குபக்கபலமாக இப்படத்தில் இருப்பார்கள் என்றார்.

கமலுக்கு அம்மாவாக நடிக்க கூப்பிட்டார்கள்! சுஹாசினி சித்தப்பா கமல்ஹாசனுக்கும், ரஜினி, விஜயகாந்த்துக்கும் அம்மாவாக நடிக்க என்னை சிலர் கூப்பிட்டார்கள். ஆனால் நான்மறுத்து விட்டேன் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அசோகமித்ரன். இதில் தனுஷின் பெற்றோர்களாக இயக்குனர் பாக்யராஜும், நடிகைசுஹாசினியும் நடிக்கிறார்கள். இப்படத்தின் அறிமுகத்திற்காக பாக்யராஜ், சுஹாசினி, தனுஷ் உள்ளிட்டோர் சென்னையில்செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களை சுஹாசினி செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அம்மா என்ற கேரக்டருக்குசினிமாவில் மரியாதையே கிடையாது. அதை ஒரு இரண்டாம் ரக கேரக்டராக, இழிவாகத் தான் பார்க்கிறார்கள். என்னை சிலர் அம்மா கேரக்டரில் நடிக்க அழைத்தார்கள். யாருக்குத் தெரியுமா? கமல்ஹாசனுக்கும், ரஜினி,விஜயகாந்த்துக்கும். கமலுக்கு போய் நான் எப்படி அம்மாவாக நடிக்க முடியும்? அவர் எனக்கு சித்தப்பா என்றுஎல்லோருக்குமே நன்றாகத் தெரியும்.இங்கு யாரும் எதற்கும் லாஜிக் பார்ப்பதில்லை, இது ஒரு கற்பனையான உலகம். மிகப் பெரிய அழகு தேவதையாக,ஹீரோயினாக நடித்தவர்கள் கூட இங்கு அம்மா வேடம் போட்டிருக்கிறார்கள். எனக்கு தனுஷை ரொம்பப் பிடிக்கும். நான் தனுஷின் அம்மாவாக நடிக்கப் போகிறேன் என்று என் மகனிடம் கூறியபோதுஅவன் பொறாமைப்பட்டான். எனது 25வது வருட திரையுலக வாழ்க்கையில் இப்பட வாய்ப்பு வந்துள்ளது.சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஓடிவிட்டதே என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 250படங்களில் நடித்து விட்டேன். இதில் தாய்மொழியான தமிழை விட தெலுங்குப் படங்களே அதிகம். கேமரமேன் அசோக்குமாரிடம் கேமரா பயின்ற நான் நடிகையாக மாறியது சுவாரஸ்யமான அனுபவம். பாக்யராஜுடன்மட்டும் இதுவரை நடிக்காமல் இருந்தேன். சொல்லப் போனால் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்திலேயே நான் ஜோடியாகநடித்திருக்க வேண்டும். ஆனால் முடியாமல் போய் விட்டது. அந்தப் படத்தில் நடித்த எனது தோழி பூர்ணிமா, பாக்யராஜுக்கு உண்மையிலேயே டார்லிங் ஆகி விட்டார் என்றார் சுஹாசினி. தனுஷ் கூறியபோது, பாக்யராஜ்-சுஹாசினியின் மகனாக நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இருவரும் எனக்குபக்கபலமாக இப்படத்தில் இருப்பார்கள் என்றார்.

Subscribe to Oneindia Tamil

சித்தப்பா கமல்ஹாசனுக்கும், ரஜினி, விஜயகாந்த்துக்கும் அம்மாவாக நடிக்க என்னை சிலர் கூப்பிட்டார்கள். ஆனால் நான்மறுத்து விட்டேன் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அசோகமித்ரன். இதில் தனுஷின் பெற்றோர்களாக இயக்குனர் பாக்யராஜும், நடிகைசுஹாசினியும் நடிக்கிறார்கள். இப்படத்தின் அறிமுகத்திற்காக பாக்யராஜ், சுஹாசினி, தனுஷ் உள்ளிட்டோர் சென்னையில்செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களை சுஹாசினி செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அம்மா என்ற கேரக்டருக்குசினிமாவில் மரியாதையே கிடையாது. அதை ஒரு இரண்டாம் ரக கேரக்டராக, இழிவாகத் தான் பார்க்கிறார்கள்.

என்னை சிலர் அம்மா கேரக்டரில் நடிக்க அழைத்தார்கள். யாருக்குத் தெரியுமா? கமல்ஹாசனுக்கும், ரஜினி,விஜயகாந்த்துக்கும். கமலுக்கு போய் நான் எப்படி அம்மாவாக நடிக்க முடியும்? அவர் எனக்கு சித்தப்பா என்றுஎல்லோருக்குமே நன்றாகத் தெரியும்.


இங்கு யாரும் எதற்கும் லாஜிக் பார்ப்பதில்லை, இது ஒரு கற்பனையான உலகம். மிகப் பெரிய அழகு தேவதையாக,ஹீரோயினாக நடித்தவர்கள் கூட இங்கு அம்மா வேடம் போட்டிருக்கிறார்கள்.

எனக்கு தனுஷை ரொம்பப் பிடிக்கும். நான் தனுஷின் அம்மாவாக நடிக்கப் போகிறேன் என்று என் மகனிடம் கூறியபோதுஅவன் பொறாமைப்பட்டான். எனது 25வது வருட திரையுலக வாழ்க்கையில் இப்பட வாய்ப்பு வந்துள்ளது.

சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஓடிவிட்டதே என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 250படங்களில் நடித்து விட்டேன். இதில் தாய்மொழியான தமிழை விட தெலுங்குப் படங்களே அதிகம்.

கேமரமேன் அசோக்குமாரிடம் கேமரா பயின்ற நான் நடிகையாக மாறியது சுவாரஸ்யமான அனுபவம். பாக்யராஜுடன்மட்டும் இதுவரை நடிக்காமல் இருந்தேன். சொல்லப் போனால் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்திலேயே நான் ஜோடியாகநடித்திருக்க வேண்டும். ஆனால் முடியாமல் போய் விட்டது.

அந்தப் படத்தில் நடித்த எனது தோழி பூர்ணிமா, பாக்யராஜுக்கு உண்மையிலேயே டார்லிங் ஆகி விட்டார் என்றார் சுஹாசினி.

தனுஷ் கூறியபோது, பாக்யராஜ்-சுஹாசினியின் மகனாக நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இருவரும் எனக்குபக்கபலமாக இப்படத்தில் இருப்பார்கள் என்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil