»   »  சுகாசினிக்கு நோட்டீஸ்: சென்னை:திருமணத்துக்கு முன்பே செக்ஸ் குறித்த விவகாரத்தில் குஷ்புவிடம் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாகதிமிர்த்தனத்துடன் பேசிய மாஜி நடிகை சுகாசினிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தங்கர் பச்சான் விஷயத்தில் மட்டும் குதித்துக் கொண்டு அவரை மன்னிப்பு கேட்க வைத்த நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த்,குஷ்பு விஷயத்தில் வாய்மூடி மெளனமானார். இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.இந் நிலையில் இப்போது சுகாசினியும் குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கும் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குஷ்பு விவகாரத்தைப் போலவே இதிலும் அமைதி காத்தால் தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும்என்பதால் சுகாசினிக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தனது கருத்துக்கு குஷ்பு மன்னிப்பு கேட்டதையடுத்தும், அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாலும் இது குறித்து நடிகர் சங்கஉறுப்பினர்கள் யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என சங்கத்தின் சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும்தெரிவித்திருந்தோம்.மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது நிதானமாகவும், எந்த பிரச்சனையும்உருவாகாத வகையிலும் பேசுமாறும் கேட்டுக் கொண்டோம்.அப்படி ஏதாவது பேசி பிரச்சனை வந்தால் அதற்கு நடிகர் சங்கம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்திருந்தோம். ஆனால்,சுகாசினி மணிரத்னம் மட்டும் தனிப்பட்ட முறையில் குஷ்பு விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.அவரது பேச்சு நடிகர் சங்கத்துக்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது. அவரது பேச்சை நாங்கள் வன்மையாககண்டிக்கிறோம். இது குறித்து தன்னிலை விளக்கம் அளிக்குமாறு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.குஷ்பு விஷயத்தில் விஜய்காந்த் இதுவரையில் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் தனது நிலை என்பதைவிஜய்காந்த் விளக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.இந் நிலையில் சுகாசினிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. அவரதுவீட்டுக்கு கழுதை ஊர்வலம் நடத்தப் போவதாக பாமக மற்றும் பல மகளிர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.மேலும் சுகாசினி, குஷ்புவுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.குஷ்பு பட ரிலீஸ் சிக்கல்:இந் நிலையில் குஷ்பு நடித்துள்ள ஜூன்-ஆர், மற்றும் சத்யராஜுடன் அவர் நடித்த வெற்றிவேல் சக்திவேல் ஆகிய படங்களைவாங்கிய வினியோகஸ்தர்கள் அந்தப் படங்களை ரிலீஸ் செய்ய மறுத்து வருகின்றனர்.குஷ்பு படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் அஞ்சுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் பணத்தைத் திரும்பக்கேட்டு படங்களின் தயாரிப்பாளர்களை நெருக்க ஆரம்பித்திருப்பதால் இரு படங்களும் நிரந்தரமாக பெட்டிக்குள் தூங்கும் நிலைஉருவாகியுள்ளது.

சுகாசினிக்கு நோட்டீஸ்: சென்னை:திருமணத்துக்கு முன்பே செக்ஸ் குறித்த விவகாரத்தில் குஷ்புவிடம் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாகதிமிர்த்தனத்துடன் பேசிய மாஜி நடிகை சுகாசினிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தங்கர் பச்சான் விஷயத்தில் மட்டும் குதித்துக் கொண்டு அவரை மன்னிப்பு கேட்க வைத்த நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த்,குஷ்பு விஷயத்தில் வாய்மூடி மெளனமானார். இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.இந் நிலையில் இப்போது சுகாசினியும் குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கும் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குஷ்பு விவகாரத்தைப் போலவே இதிலும் அமைதி காத்தால் தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும்என்பதால் சுகாசினிக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தனது கருத்துக்கு குஷ்பு மன்னிப்பு கேட்டதையடுத்தும், அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாலும் இது குறித்து நடிகர் சங்கஉறுப்பினர்கள் யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என சங்கத்தின் சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும்தெரிவித்திருந்தோம்.மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது நிதானமாகவும், எந்த பிரச்சனையும்உருவாகாத வகையிலும் பேசுமாறும் கேட்டுக் கொண்டோம்.அப்படி ஏதாவது பேசி பிரச்சனை வந்தால் அதற்கு நடிகர் சங்கம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்திருந்தோம். ஆனால்,சுகாசினி மணிரத்னம் மட்டும் தனிப்பட்ட முறையில் குஷ்பு விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.அவரது பேச்சு நடிகர் சங்கத்துக்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது. அவரது பேச்சை நாங்கள் வன்மையாககண்டிக்கிறோம். இது குறித்து தன்னிலை விளக்கம் அளிக்குமாறு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.குஷ்பு விஷயத்தில் விஜய்காந்த் இதுவரையில் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் தனது நிலை என்பதைவிஜய்காந்த் விளக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.இந் நிலையில் சுகாசினிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. அவரதுவீட்டுக்கு கழுதை ஊர்வலம் நடத்தப் போவதாக பாமக மற்றும் பல மகளிர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.மேலும் சுகாசினி, குஷ்புவுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.குஷ்பு பட ரிலீஸ் சிக்கல்:இந் நிலையில் குஷ்பு நடித்துள்ள ஜூன்-ஆர், மற்றும் சத்யராஜுடன் அவர் நடித்த வெற்றிவேல் சக்திவேல் ஆகிய படங்களைவாங்கிய வினியோகஸ்தர்கள் அந்தப் படங்களை ரிலீஸ் செய்ய மறுத்து வருகின்றனர்.குஷ்பு படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் அஞ்சுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் பணத்தைத் திரும்பக்கேட்டு படங்களின் தயாரிப்பாளர்களை நெருக்க ஆரம்பித்திருப்பதால் இரு படங்களும் நிரந்தரமாக பெட்டிக்குள் தூங்கும் நிலைஉருவாகியுள்ளது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:


திருமணத்துக்கு முன்பே செக்ஸ் குறித்த விவகாரத்தில் குஷ்புவிடம் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாகதிமிர்த்தனத்துடன் பேசிய மாஜி நடிகை சுகாசினிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தங்கர் பச்சான் விஷயத்தில் மட்டும் குதித்துக் கொண்டு அவரை மன்னிப்பு கேட்க வைத்த நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த்,குஷ்பு விஷயத்தில் வாய்மூடி மெளனமானார். இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந் நிலையில் இப்போது சுகாசினியும் குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கும் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குஷ்பு விவகாரத்தைப் போலவே இதிலும் அமைதி காத்தால் தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும்என்பதால் சுகாசினிக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தனது கருத்துக்கு குஷ்பு மன்னிப்பு கேட்டதையடுத்தும், அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாலும் இது குறித்து நடிகர் சங்கஉறுப்பினர்கள் யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என சங்கத்தின் சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும்தெரிவித்திருந்தோம்.

மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது நிதானமாகவும், எந்த பிரச்சனையும்உருவாகாத வகையிலும் பேசுமாறும் கேட்டுக் கொண்டோம்.

அப்படி ஏதாவது பேசி பிரச்சனை வந்தால் அதற்கு நடிகர் சங்கம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்திருந்தோம். ஆனால்,சுகாசினி மணிரத்னம் மட்டும் தனிப்பட்ட முறையில் குஷ்பு விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.

அவரது பேச்சு நடிகர் சங்கத்துக்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது. அவரது பேச்சை நாங்கள் வன்மையாககண்டிக்கிறோம். இது குறித்து தன்னிலை விளக்கம் அளிக்குமாறு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.


குஷ்பு விஷயத்தில் விஜய்காந்த் இதுவரையில் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் தனது நிலை என்பதைவிஜய்காந்த் விளக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந் நிலையில் சுகாசினிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. அவரதுவீட்டுக்கு கழுதை ஊர்வலம் நடத்தப் போவதாக பாமக மற்றும் பல மகளிர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மேலும் சுகாசினி, குஷ்புவுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

குஷ்பு பட ரிலீஸ் சிக்கல்:

இந் நிலையில் குஷ்பு நடித்துள்ள ஜூன்-ஆர், மற்றும் சத்யராஜுடன் அவர் நடித்த வெற்றிவேல் சக்திவேல் ஆகிய படங்களைவாங்கிய வினியோகஸ்தர்கள் அந்தப் படங்களை ரிலீஸ் செய்ய மறுத்து வருகின்றனர்.

குஷ்பு படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் அஞ்சுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் பணத்தைத் திரும்பக்கேட்டு படங்களின் தயாரிப்பாளர்களை நெருக்க ஆரம்பித்திருப்பதால் இரு படங்களும் நிரந்தரமாக பெட்டிக்குள் தூங்கும் நிலைஉருவாகியுள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil