»   »  கலாசாரத்துக்கு எதிராக நடித்ததில்லை: சுஹாசினி எனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையில் தமிழ் கலாசாரத்துக்கு எதிராக நான் நடித்ததில்லை என கொம்பு புகழ் நடிகைசுஹாசினி கூறியுள்ளார்.பெண்கள் கற்பு விஷயமாக குஷ்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சுஹாசினிக்கு எதிராக பயங்கர எதிர்ப்புகிளம்பியது. பல நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒரு வழியாக இந்த பிரச்சினை ஓய்ந்து தற்போது சுஹாசினிசுதந்திரமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.இந் நிலையில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் நடந்த ரோட்டரி சங்க மாநாட்டின் நிறைவு விழாவில் சுஹாசினி பேசியதாவது:நான் 19 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 1989ம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது. இது வரை 186 விருதுகளைப் பெற்றுள்ளேன்.சினிமாவுக்கு வந்த 20 ஆண்டுகளில் பணம், புகழ், விருப்பு, வெறுப்பு, வழக்கு என வாழ்க்கையில் அனைத்தையும் சந்தித்துவிட்டேன்.படிக்கும் வயதில், சினிமாவில் நடிப்பைத் துவங்கியதால் ஆபாசமாகவும் தமிழ் கலாசாரத்துக்கு எதிராகவும் நடித்ததில்லை.இந்திரா படம் இயக்கியதில் நல்ல அனுபவம் கிடைத்தது.கடந்த ஓராண்டாக விஜய் டிவியில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தேன். அந்தநிகழ்ச்சிக்குப் பிறகு பல கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து என்னால் முடிந்தஉதவிகளை செய்து வருகிறேன் என்றார்.குஷ்பு விஷயத்திலும் இப்படி பட்டும்படாமல் பேசிட்டுப் போயிருந்தால் எதுக்கு வருது வம்பும்... கொம்பும்...

கலாசாரத்துக்கு எதிராக நடித்ததில்லை: சுஹாசினி எனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையில் தமிழ் கலாசாரத்துக்கு எதிராக நான் நடித்ததில்லை என கொம்பு புகழ் நடிகைசுஹாசினி கூறியுள்ளார்.பெண்கள் கற்பு விஷயமாக குஷ்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சுஹாசினிக்கு எதிராக பயங்கர எதிர்ப்புகிளம்பியது. பல நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒரு வழியாக இந்த பிரச்சினை ஓய்ந்து தற்போது சுஹாசினிசுதந்திரமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.இந் நிலையில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் நடந்த ரோட்டரி சங்க மாநாட்டின் நிறைவு விழாவில் சுஹாசினி பேசியதாவது:நான் 19 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 1989ம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது. இது வரை 186 விருதுகளைப் பெற்றுள்ளேன்.சினிமாவுக்கு வந்த 20 ஆண்டுகளில் பணம், புகழ், விருப்பு, வெறுப்பு, வழக்கு என வாழ்க்கையில் அனைத்தையும் சந்தித்துவிட்டேன்.படிக்கும் வயதில், சினிமாவில் நடிப்பைத் துவங்கியதால் ஆபாசமாகவும் தமிழ் கலாசாரத்துக்கு எதிராகவும் நடித்ததில்லை.இந்திரா படம் இயக்கியதில் நல்ல அனுபவம் கிடைத்தது.கடந்த ஓராண்டாக விஜய் டிவியில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தேன். அந்தநிகழ்ச்சிக்குப் பிறகு பல கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து என்னால் முடிந்தஉதவிகளை செய்து வருகிறேன் என்றார்.குஷ்பு விஷயத்திலும் இப்படி பட்டும்படாமல் பேசிட்டுப் போயிருந்தால் எதுக்கு வருது வம்பும்... கொம்பும்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையில் தமிழ் கலாசாரத்துக்கு எதிராக நான் நடித்ததில்லை என கொம்பு புகழ் நடிகைசுஹாசினி கூறியுள்ளார்.

பெண்கள் கற்பு விஷயமாக குஷ்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சுஹாசினிக்கு எதிராக பயங்கர எதிர்ப்புகிளம்பியது. பல நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒரு வழியாக இந்த பிரச்சினை ஓய்ந்து தற்போது சுஹாசினிசுதந்திரமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந் நிலையில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் நடந்த ரோட்டரி சங்க மாநாட்டின் நிறைவு விழாவில் சுஹாசினி பேசியதாவது:

நான் 19 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 1989ம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது. இது வரை 186 விருதுகளைப் பெற்றுள்ளேன்.சினிமாவுக்கு வந்த 20 ஆண்டுகளில் பணம், புகழ், விருப்பு, வெறுப்பு, வழக்கு என வாழ்க்கையில் அனைத்தையும் சந்தித்துவிட்டேன்.


படிக்கும் வயதில், சினிமாவில் நடிப்பைத் துவங்கியதால் ஆபாசமாகவும் தமிழ் கலாசாரத்துக்கு எதிராகவும் நடித்ததில்லை.இந்திரா படம் இயக்கியதில் நல்ல அனுபவம் கிடைத்தது.

கடந்த ஓராண்டாக விஜய் டிவியில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தேன். அந்தநிகழ்ச்சிக்குப் பிறகு பல கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து என்னால் முடிந்தஉதவிகளை செய்து வருகிறேன் என்றார்.

குஷ்பு விஷயத்திலும் இப்படி பட்டும்படாமல் பேசிட்டுப் போயிருந்தால் எதுக்கு வருது வம்பும்... கொம்பும்...


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil