நான் தற்கொலைக்கு முயன்றேனா?: நித்யா மேனன் பட இயக்குனர்
மும்பை: தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்திகள் குறித்து இயக்குனர் ராஜசிம்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் ராஜசிம்ஹா. சந்தீப் கிஷன், நித்யா மேனனை வைத்து ஒக்க அம்மாயி தப்ப என்ற படத்தை இயக்கியவர்.
இந்நிலையில் அவர் மும்பையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.

தற்கொலை முயற்சி
வேலை இல்லாமல் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த ராஜசிம்ஹா மும்பை சென்ற இடத்தில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின. அவர் மயங்கிக் கிடந்த புகைப்படமும் வெளியானது.

ராஜசிம்ஹா
தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்று ராஜசிம்ஹா விளக்கம் அளித்துள்ளார். நான் தற்போது நலமாக இருக்கிறேன். உடல்நலக்குறைவால் மயக்கம் அடைந்துவிட்டேன் அவ்வளவு தான் என்கிறார் ராஜசிம்ஹா.

நன்றி
எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. என் மீது பாசம் வைத்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்னும் மூன்று நாட்களில் நான் ஹைதராபாத்துக்கு திரும்பிவிடுவேன். அதன் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என்று ராஜசிம்ஹா தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர்
ராஜசிம்ஹா ருத்ரமா தேவி உள்பட 40 படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அண்மையில் கன்னட திரையுலகிலும் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











