For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஏதோ தப்பா நடந்திருக்கு.. தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.. விஜே சித்ரா மரணத்தால் மனமுடைந்த வனிதா

  |

  சென்னை: தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும், விஜே சித்ராவின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

  பிரபல தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்த விஜே சித்ரா தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என தொடர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

  தற்கொலையா?

  தற்கொலையா?

  சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக செய்திகள் வெளியான பின்னர், அவரது குடும்பத்தினர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் கிளப்பினர். அதன் பின்னர் தொடங்கப்பட்ட விசாரணை ஒட்டுமொத்த பாலிவுட்டையே உலுக்கியது. இந்நிலையில், விஜே சித்ராவின் தற்கொலையிலும் மர்மம் நீடிப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

  இரவு வரை ஷூட்டிங்

  இரவு வரை ஷூட்டிங்

  நேற்று இரவு வரை ஷூட்டிங்கில் செம பிசியாக இருந்துள்ளார் சின்னத்திரை நடிகை சித்ரா. பின்னர் நசரத்பேட்டை அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வருங்கால கணவர் ஹேமந்த் ரவியுடன் தங்கி உள்ளார். ஆனால், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டபோது ஹேமந்த் அறைக்கு வெளியே இருந்ததாக கூறப்படுகிறது.

  பதிவு திருமணம்

  பதிவு திருமணம்

  கடந்த செப்டம்பரில் ஹேமந்த் ரவியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இரு மாதங்களுக்கு முன்னரே இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது என்கிற ரகசியத்தை போலீசார் விசாரணையில் ஹேமந்த் கூறியிருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், குளிக்கப் போகிறேன், நீங்க வெளியே போங்க என சித்ரா ஏன் ஹேமந்தை வெளியே அனுப்ப வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

  இந்த வருஷத்துலயே இதுதான்

  இந்த வருஷத்துலயே இதுதான்

  இந்நிலையில், நடிகையும் விஜய் டிவி பிரபலமுமான வனிதா விஜயகுமார் இந்த வருஷத்துலயே நான் கேட்கும் மிகவும் ஷாக்கிங்கான நியூஸ் இதுதான் என்று ட்வீட் போட்டுள்ளார். போன வாரம் தான் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்தார் சித்ரா, அதுக்குள்ள என்ன ஆச்சு என்றும் கேள்வியை எழுப்பி உள்ளார்.

  தற்கொலைக்கு வாய்ப்பில்லை

  தற்கொலைக்கு வாய்ப்பில்லை

  பிக் பாஸ் பிரபலம் ரேஷ்மா பசுபுலேட்டி மாதிரி இருக்கீங்கன்னு அவர் கிட்ட நான் சொன்னேன், ரொம்ப அழகாவும் தைரியமாகவும் இருக்கக் கூடிய பெண் அவர், தற்கொலையாக இருக்க எந்தவொரு வாய்ப்பும் இல்லை. வேறு ஏதோ ஒன்று நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது என தனது ட்வீட்டில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் வனிதா விஜயகுமார்.

  கண்களில் நிற்கிறார்

  கண்களில் நிற்கிறார்

  இவிபி சிட்டியில் கலக்கப் போவது யாரு செட்டுக்கு அருகே தான் ஸ்டார் மியூசிக் ஷூட்டிங்கில் இருந்தார். இருவரும் அங்கிருந்து தான் அதிகாலை 2.30 மணிக்கு கிளம்பினோம். ஹோட்டலுக்கு கார் ஓட்டிச் சென்ற அவர், அங்கே ஏன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். ரொம்ப டிஸ்டர்பா இருக்கு.. அவள் இன்னும் என் கண்களிலே நிற்கிறாள் என ரொம்பவே உருக்கமாக பதிவிட்டுள்ளார் வனிதா.

  தீவிரமாகும் விசாரணை

  தீவிரமாகும் விசாரணை

  விஜே சித்ராவின் மரணம் தற்கொலையா? கொலையா? அல்லது அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்கிற கோணத்தில் வருங்கால கணவர் ஹேமந்த் ரவி, சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் விஜய் டிவியில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் பிரபலங்கள் இயக்குநர்கள் என பலரிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

  English summary
  Vanitha tweeted, “This is the most shocking news I heard this year. Chithra what happened..just met her in #KPY last week she came as guest..most vibrant, bold ,beautiful and happy girl. suicide...doesnt make sense ...something else is very fishy”
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X