சுஷாந்த் சிங் பயோபிக்கில் அவர் போலவே தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலம்.. தேடி வந்த அதிர்ஷ்டம்!

By

மும்பை: மறைந்த சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை கதை, சூசைட் ஆர் மர்டர்' என்ற பெயரில் சினிமாவாக உருவாகிறது.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை கதை சினிமா ஆகிறது. இவர் பயோபிக்கை எடுக்க இருப்பதாக இரண்டு இயக்குனர்கள் அறிவித்திருந்தனர்.

அதில் விஜய் சேகர் குப்தா தயாரிக்கும் படத்துக்கு 'சூசைட் ஆர் மர்டர்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும்

நடிகர் சுஷாந்த் சிங், கடந்த மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர். கை போ சே என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமான சுஷாந்த், சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே, சிச்சோர், கேதார்நாத் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவாகும் வாழ்க்கை

சினிமாவாகும் வாழ்க்கை

அவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கப்படுகிறது. இதை இரண்டு இயக்குனர்கள் படமாக்க இருப்பதாகக் கூறியிருந்தனர். அதில் ஒருவர் ஷாமிக் மவுலிக்.

சச்சின் திவாரி

சச்சின் திவாரி

இவர் இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய் சேகர் குப்தா தயாரிக்கிறார். ஸ்ரத்தா பண்டிட் இசை அமைக்கிறார். மறைந்த சுஷாந்த் சிங்கின் சாயலை, அப்படியே கொண்டவர் சச்சின் திவாரி. டிக்டாக்கில் பிரபலமான இவர், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருப்பவர். இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தாக நடிக்கிறார். படத்துக்கு சூசைட் ஆர் மர்டர் (sucide or Mureder) என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ஜொலிக்கும் நட்சத்திரம்

ஜொலிக்கும் நட்சத்திரம்

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சச்சின் திவாரி, 'சிறு நகரத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரமாகிறான். இது அவரின் பயணம். அறிமுகப்படுத்துகிறோம் சச்சின் திவாரி (அவுட் சைடர்). என்று குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் மறைவுக்குப் பிறகு நெபோடிசம் குறித்த விவாதம் பாலிவுட்டில் பரபரப்பாகி இருக்கிறது.

அவுட்சைடர்

அவுட்சைடர்

சினிமா வாரிசா, வெளியில் இருந்து வந்தவர்களா என்பது பற்றி பலர் பேசி வரும் நிலையில் இந்த போஸ்டரில் அவுட்சைடர் என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர், பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே நிகில் ஆனந்த் என்பவரும் சுஷாந்த் சிங் பயோபிக்கை கிரெளட் பண்ட் முறையில், அதாவது பொதுமக்களிடம் இருந்து பணம் சேகரித்து தயாரிக்க இருப்பதாகக் கூறி இருந்தார்.

Recommended Video

Sushant இறப்பை பயன்படுத்தும் Kangana • Tapsee Strong Reply
வேலைகள் தொடங்கும்

வேலைகள் தொடங்கும்

இந்தி தமிழ், தெலுங்கு மொழிகளில் இதை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். கொரோனா பிரச்னை முடிந்த பின் படத்துக்கான வேலைகள் தொடங்கும் என்றும் கதை மற்றும் நடிகர், நடிகை தேர்வில் படக்குழு ஈடுபட இருக்கிறது என்றும் 2022 ஆம் ஆண்டு இந்தப் படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் ஷாமிக் மவுலிக் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X