பிக் பாஸ் ஷாரிக் கன்னத்தை கடித்து இழுத்த சுஜா வருணி.. கணவர் சிவா என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஷாரிக்கின் கன்னத்தை நடிகை சுஜா வருணி வெறி கொண்டு கடித்து இழுக்கும் வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாரிக் மற்றும் சுஜா வருணி உள்ளிட்ட பிரபலங்கள் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.

கடந்த சீசன் டைட்டில் வென்ற ஷாரிக் உடன் இந்த சீசன் டைட்டில் வென்ற சுஜா வருணி கட்டிப் பிடித்து கடித்து விளையாடும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

சுஜா வருணி

சுஜா வருணி

2002ல் வெளியான பிளஸ் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. அர்ஜுனின் வாத்தியார் படத்தில் என்னடி முனியம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானவர். மிளகா, சேட்டை, பென்சில், ஆண் தேவதை, தெலுங்கு த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் ஜோடிகள் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் ஜோடிகள் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த நடிகை சுஜா வருணி. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் போட்டியாளராக தனது கணவர் சிவகுமாருடன் கலந்து கொண்டு டைட்டிலையும் தட்டிச் சென்றார்.

ஷாரிக்குடன்

ஷாரிக்குடன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரியாஸ் கானின் மகன் ஷாரிக் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 1ல் டைட்டிலை வென்றார். இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டியில் ஷாரிக்குடன் சுஜா வருணி எடுத்துக் கொண்ட போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

கன்னத்தை கடித்து

கன்னத்தை கடித்து

போட்டோக்களுடன் ஒரு வீடியோவும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்ட நிலையில், ரசிகர்களை ரொம்பவே ஷாக் ஆக்கி உள்ளது. அந்த வீடியோவில் ஷாரிக்கை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்க செல்வதை போல சென்று அவரது கன்னத்தை ஒரேயடியாக கடித்து இழுத்து விட்டார் சுஜா வருணி.

திட்டிய ஷாரிக்

திட்டிய ஷாரிக்

இப்படி கடிச்சிட்டியேன்னு வலி தாங்க முடியாமல் ஷாரிக் சுஜா வருணியை திட்டித் தீர்க்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இருவரும் செம ஜாலியாக விளையாடிக் கொள்வதை வேடிக்கை பார்த்த சுஜா வருணியின் கணவர் சிவகுமார் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் போட்டுள்ள கமெண்ட் தான் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

கணவர் என்ன சொன்னாரு

கணவர் என்ன சொன்னாரு

தனது மனைவி சுஜா வருணி சக போட்டியாளரான ஷாரிக்கின் கன்னத்தை கடித்ததை பார்த்த சிவகுமார், 'சோ க்யூட்' என கமெண்ட் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் திருப்பி உள்ளார். இப்படியா கடிப்பீங்க சுஜா பாவம் ஷாரிக் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X