பீரியட்ஸ் முடிஞ்ச உடனே கணவருக்கு இப்படித்தான் சிக்னல் கொடுப்பேன்.. பிக் பாஸ் பிரபலம் போட்ட வீடியொ!

சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சுஜா வருணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இவ்வளவு வெளிப்படையாய் இந்த மேட்டர் பற்றி பேசியுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு வெளியான பிளஸ் 2 படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் வாத்தியார் படத்தில் ”என்னடி முனியம்மா” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார். தொடர்ந்து சில படங்களில் குத்தாட்டம் போட்டு வந்த சுஜா வருணி மிளகா படத்தில் ஹீரோயினாக நட்டி நட்ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், ஆர்யாவின் சேட்டை, ஜி.வி. பிரகாஷ் குமாரின் பென்சில், ஆண் தேவதை, தெலுங்கு த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Suja Varunee gives signal to her husband after periods reels trending


பிக் பாஸ் ஜோடிகள் டைட்டில் வின்னர்: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த நடிகை சுஜா வருணி அதன் பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் போட்டியாளராக தனது கணவர் சிவகுமாருடன் கலந்து கொண்டு அமீர் மற்றும் பாவனியுடன் டைட்டிலையும் ஷேர் செய்துக் கொண்டார்.

இமயமலைக்கு டூர்: தனது கணவருடன் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் சுஜா வருணி. வெப்சீரிஸ்களில் நடித்து வந்த சிவகுமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் இமயமலைக்கு சென்றிருந்தார். அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.

பீரியட்ஸ் முடிந்தவுடன்: மனைவியின் பீரியட்ஸ் நேரம் முடியும் வரை அமைதியாக சமத்துப்பிள்ளையாக காத்திருக்கும் கணவன்களுக்கு மட்டுமே மனைவி கொடுக்கும் இந்த சிக்னல் புரியும் என தற்போது வித்தியாசமாக ஒலி எழுப்பும் வீடியோவை பாத்ரூமில் இருந்து வெளியே வரும் போது சுஜா வருணி கொடுக்க அதை பார்த்து பிஸ்கட்டுக்கு அலையும் நாய் போல அவரது கணவர் தவியாய் தவிக்கும் காட்சிகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

காதலர் தின ஸ்பெஷல்: காதலர் தினத்துக்கான ஸ்பெஷல் வீடியோ என இப்படியொரு வீடியோவை சுஜா வருணி வெளியிட்டுள்ள நிலையில், எக்கச்சக்கமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. “என்னதான் இருந்தாலும் இப்படி ஓபனா போட்டு உடைச்சிட்டீங்களே” என்றும் ”சவுண்டு பக்கத்து தெரு வரைக்கும் கேட்குது சுஜாக்கா” என்றும் ”அவ்ளோ வெறி மாப்பிளைக்கி” என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


இதில் என்ன வெட்கம்: இது யூனிவர்ஸாக நடக்கிற விஷயம் தானே இதில் என்ன கூச்சம் மற்றும் வெட்கப்படுவது என ரசிகர்கள் சுஜா வருணிக்கு ஆதரவான கமெண்ட்டுகளும், அவருக்கு ஹார்ட்டீன்கள் மற்றும் லைக்குகளை போட்டு வருகின்றனர். கணவன் மற்றும் மகனுடன் ரொம்பவே அன்பாகவும் பாசத்துடன் வாழ்ந்து வரும் சுஜா வருணி டிவி தொடர்களில் அதிகளவில் பிசியாகி உள்ளார். சோஷியல் மீடியாவில் இவர் வெளியிடும் ரீல்ஸ் வீடீயோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X