சிவாஜி பேரனை 12 வருடமாக காதலிக்கும் சுஜா வருணி
சென்னை: சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார் 12 ஆண்டுகளாக காதலித்து வருகிறார் நடிகை சுஜா வருணி.
பிக் பாஸ் முதல் சீசனில் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் சுஜா வருணி. தைரியமான பொண்ணு, பொறுமையான பொண்ணு என்று பெயர் எடுத்தவர்.

அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி அவர் சிவக்குமாரை முதல் முறையாக சந்தித்துள்ளார்.
அவர்கள் திருப்பதிக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியானபோது தான் அவர்கள் காதலிக்கும் விஷயமே தெரிய வந்தது. முதலில் மறுத்த அவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில் சுஜா, சிவக்குமார் திருமணம் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி நடக்க உள்ளது. பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்தபோது கூட எப்ப சாப்பாடு போடுவீங்க என்று கமல் சுஜாவிடம் கேட்டார். அதற்கு அவர் நவம்பர் மாதம் சார் என்றார்.
சிவாஜி தேவ் என்ற தனது பெயரை சிவக்குமார் என்று மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











