பிக்பாஸ் பிரபலத்துக்கு நவம்பர் 19ம் தேதி டும்டும்டும்... காதலரை கரம் பிடிக்கிறார்!

நடிகை சுஜா வருணி தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.

சென்னை: பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணிக்கு வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

நடிகை சுஜா வருணி பிக்பாஸ் முதல் சீசனில் வைல் கார்டு என்ட்ரி கொடுத்தவர். 2002 ஆம் ஆண்டிலிருந்து பல படங்களில் நடித்து வந்தாலும், முன்னணி நடிகையாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

Suja Varunee marriage date!

சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வா டீல் என்ற படம் ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில் நீண்ட நாள் காதலரான நடிகர் சிவகுமாரை நவம்பர் 19ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமாகிய சிவாஜிதேவ்வும் கடந்த 11 வருடங்களாக காதலித்து வருகின்றனர். அவர் சிவாஜிதேவ் என்ற பெயரை மாற்றி சிவக்குமார் என படங்களில் நடித்துவருகிறார்.

சிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்துபோகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருவரும் திருப்பதியில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் நிச்சயதார்த்த மோதிரத்தையும் சுஜாவுக்கு அணிவித்தார்.

இப்போது சுஜா வருணி திருமணத் தேதியை அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X