அக்கா.. என் நெஞ்சு நிறைஞ்சிருக்கு.. நடிகை பிரீதா ஹரி காலில் விழுந்து ஆசி வாங்கிய சுஜா வருணி!

சென்னை: படையப்பா படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த நடிகை பிரீதா ஹரி காலில் விழுந்து பிக் பாஸ் சுஜா வருணி ஆசி வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான பிரீதா இயக்குநர் ஹரியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சினிமாவில் நடிப்பதை 2002ம் ஆண்டே நிறுத்திக் கொண்டார்.

Suja Varunee shares Preetha Hari hosts Varalakshmi Viratham in a grand manner

நேற்று பிரீதா ஹரி வீட்டில் நடந்த வரலட்சுமி விரதம் பூஜை நிகழ்ச்சியில் நடிகை சினேகா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், சுஜா வருணியும் பங்கேற்றார்.

வரலட்சுமி விரதம்: மாங்கல்ய வரம் வேண்டி பெண்கள் வீட்டிலேயே கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. விஜயலட்சுமி, நடிகை பிரணிதா, நக்‌ஷத்ரா நாகேஷ், சுஜா வருணி உள்ளிட்ட பல நடிகைகளின் வீடுகளில் நடைபெற்ற வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

Suja Varunee shares Preetha Hari hosts Varalakshmi Viratham in a grand manner

பிரீதா வீட்டில் பெரிய விசேஷம்: பொண்ணுவீட்டுக்காரன், படையப்பா, புன்னகை தேசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பிரீதா விஜயகுமார், இயக்குநர் ஹரியை திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம் நிகழ்ச்சிக்கு சினேகா, சுஜா வருணி உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் கலந்து கொண்ட வீடியோவை சுஜா வருணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Suja Varunee shares Preetha Hari hosts Varalakshmi Viratham in a grand manner

காலில் விழுந்த சுஜா: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி பிரீதா ஹரி வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட நிலையில், அவருக்கு கை நிறைய வளையல்களை பிரீதா அணிவித்து கிஃப்ட்டும் கொடுத்த நிலையில், பிரீதாவின் காலில் விழுந்து வணங்கி அக்கா.. என் நெஞ்சே நிறைந்து விட்டது. ரொம்ப சந்தோஷம் என தற்போது அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரீதா ஹரியை நீண்ட காலம் கழித்து பார்த்த ரசிகர்கள் இன்னமும் படையப்பா படத்தில் பார்த்ததை போலவே அழகாகவும் ஸ்லிம்மாகவும் இருக்காரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X