'ஆண் தேவதை'க்காக ரிஸ்க் எடுத்த சுஜா வருணி: அவரை திட்டாதீங்க மக்களே

By Siva

Recommended Video

ஆன் தேவதை படத்தை பார்த்துட்டு எல்லாரும் என்ன வெறுக்க போறாங்க : கதறும் சுஜா வருணி- வீடியோ

சென்னை: ஆண் தேவதை படத்திற்காக ரிஸ்க் எடுத்துள்ளார் சுஜா வருணி.

பதின் வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறார் சுஜா வருணி. இருப்பினும் நல்ல பிரேக் கிடைக்காமல் உள்ளார். இந்நிலையில் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

படங்களில் அவரை கவனிக்கத் தவறியவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து என்ன ஒரு தைரியமான பொண்ணு என்று பாராட்டினார்கள்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு தகுந்த கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சுஜா வருணி. தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ஆண் தேவதை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுஜா. அந்த கதாபாத்திரம் செய்யும் வேலைகளை பார்த்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் கோபம் வருமாம்.

சுஜா வருணி

சுஜா வருணி

ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பளம் வாங்குபவராக நடித்துள்ளார் சுஜா வருணி. இதில் கோபப்பட என்ன உள்ளது என்று நினைக்கலாம். கை நிறைய சம்பாதித்தாலும் வெட்டி பந்தா பண்ண கடன் வாங்கி வாழும் பெண்ணாக நடித்துள்ளாராம் சுஜா வருணி. அப்படிப்பட்ட பெண்ணை பார்த்தால் கோபம் வரத் தானே செய்யும். ஆண் தேவதை படம் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது.

ஆண் தேவதை

ஆண் தேவதை

இயக்குனர் தாமிரா சுஜா வருணிக்கு போன் செய்து ஆண் தேவதை படத்தின் கதையை சொன்னதுமே அவருக்கு பிடித்துவிட்டதாம். தாமிராவின் ரெட்டசுழி படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு நமக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் எப்பொழுது கிடைக்கும் என்று ஏங்கியிருக்கிறார் சுஜா. அந்த ஏக்கம் தற்போது தீர்ந்துள்ளது.

வாழக் கூடாது

வாழக் கூடாது

ஒரு பெண் எப்படி வாழக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் நடித்துள்ளேன். என்னை திட்டாமல் படத்தை பாருங்க என்று அன்பு கோரிக்கை விடுத்துள்ளார் சுஜா வருணி. நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஸ்கோப் இருந்ததால் துணிந்து ரிஸ்க் எடுத்திருக்கிறார் சுஜா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X