பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமான மலையாள லூசிஃபர்... ரீமேக் பண்ணப் போவது இந்த ஆக்‌ஷன் டைரக்டர்தான்!

By

ஐதராபாத்: 'லூசிஃபர்' படத்தின் ரீமேக்கை இயக்கப் போவது யார் என்பது உறுதியாகி உள்ளது.

தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.

இவர் மோகன்லால் நடித்த லூசிஃபர் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ஹிட்டானது.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமச், சாய்குமார் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு தீபக் தேவ் இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. வசூலில் இந்தப் படம் சாதனை செய்ததாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் இது என்கிறார்கள். தான் இயக்கிய முதல் படம் சூப்பர் ஹிட்டானது, பிருத்விராஜுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் எம்புரான் என்ற படத்தையும் இயக்க உள்ளார். இதற்கிடையே, லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவி வாங்கியிருந்தார். இந்தப் படத்தை யார் இயக்குகிறார் என்ற கேள்வி எழுந்தது.

சாஹோ இயக்குனர்

சாஹோ இயக்குனர்

இந்த படத்தின் ரீமேக்கை, தெலுங்கு இயக்குனர் விவி விநாயக் இயக்குவார் என முதலில் தகவல்கள் வெளியாயின. ஆனால், அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பிரபாஸ், ஸ்ரத்தா தாஸ், அருண் விஜய் உட்பட பலர் நடித்த ஆக்‌ஷன் படமான 'சாஹோ'வை இயக்குநர் சுஜீத் இயக்குகிறார். இதை நடிகர் சிரஞ்சீவி உறுதிப்படுத்தி உள்ளார்.

ராம்சரண் தேஜா

ராம்சரண் தேஜா

இதை சிரஞ்சீவி உறுதிப்படுத்தி உள்ளார். இதன் திரைக்கதையை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி படமாக்க உள்ளனர். சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா இதைத் தயாரிக்கிறார். இப்போது சிரஞ்சீவி, கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சாரியா படத்தில் நடித்து வருகிறார். இதில், அவர் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதையடுத்து, 'லூஃசிபர்' ரீமேக்கில் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X