ஹய்யா... நாங்க வந்துட்டோம்... அப்டேட் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!
சென்னை : புகழ்பெற்ற டிவி நடிகையாக இருப்பவர் சுஜிதா தனுஷ். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுஜிதா, பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். விக்ரமின் தாண்டவம், சாய் பல்லவியின் தியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பல புகழ்பெற்ற சீரியல்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஒளிபரப்பாகும் ஹரிசந்தனம் சீரியலில் உன்னிமாயா என்ற கேரக்டரில் நடித்ததால் கேரளாவில் சுஜிதா மிக பிரபலம்.
தமிழில் புகழ்பெற்ற டிவி சீரியல்களில் ஒன்றான விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இது, அதிகமான ரசிகர்களின் ஃபேவரைட் சீரியல்.

ஐதராபாத் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்
சமீபத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக படப்பிடிப்பு நடத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால், இந்த சீரியல் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. மெகா சங்கமம் என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி சீரியல்களை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பி வருகின்றனர். ஐதராபாத்தில் ஒரு பங்களாவில் இந்த சீரியல்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

மதுரையில் இப்படி ஒரு இடமா
மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருப்பது போல் கதை நகர்த்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலர் மதுரையில் இப்படி ஒரு இடம் எங்குள்ளது என கேட்க துவங்கி விட்டனர். மிக குறிப்பிட்ட சிலரை மட்டும் வைத்து தான் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

அப்டேட் தந்த சுஜிதா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தெலுங்கு பதிப்பான வடினம்மா சீரியலின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் தான் நடந்து வருகிறது. இதனால் இரண்டு சீரியல்களில் நடிப்பது சுஜிதாவிற்கு எளிதாக இருந்தது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றிய அப்டேட்டை ஃபோட்டோவுடன் வெளியிட்டுள்ளார் சுஜிதா.

திரும்பி வந்துட்டோம்
சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், குன்றக்குடிக்கு திரும்பிட்டோம் என குறிப்பிட்டு, படப்பிடிப்பு ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் குறிப்பிட்ட நபர்களை வைத்து சின்னத்திரை படப்பிடிப்புக்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து விட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம் மீண்டும் குன்றக்குடிக்கு திரும்பி உள்ளது.
மீண்டும் குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பது போன்று மேற்கொண்டு சீரியல் எடுக்கப்பட உள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தான் சுஜிதா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications