»   »  சுகன்யா தந்தை, டி.பி.கஜேந்திரன் தாய் மரணம்

சுகன்யா தந்தை, டி.பி.கஜேந்திரன் தாய் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை சுகன்யாவின் தந்தை ரமேஷ் இன்று மரணமடைந்தார். இதேபோல இயக்குநர், நடிகர் டி.பி.கஜேந்திரனின் தாயாரும் மரணமடைந்தார்.


தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளவர் சுகன்யா. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யாஇப்போது டிவி நடிகையாகியுள்ளார். சில தொடர்களில் நடித்து வருகிறார்.

சுகன்யாவின் தந்தை ரமேஷ் (63). உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷ் இன்று காலை சுகன்யாவின் வீட்டில் மரணமடைந்தார். அவரது உடல்பெசன்ட் நகரில் உள்ள சுகன்யாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


ரமேஷ் ஒரு படத் தயாரிப்பாளர் ஆவார். சில படங்களிலும் நடித்துள்ளார். ரமேஷின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.

இதேபோல இயக்குநர், நடிகர் டி.பி.கஜேந்திரனின் தாயார் லட்சுமி இன்று மரணமடைந்தார். நாளை காலை அவரது உடல் தகனம்நடைபெறவுள்ளதாக கஜேந்திரன் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Read more about: father of sukanya is no more

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil