ஐ லவ் யூ ஜாக்குலின்.. சிறையிலிருந்து காதலிக்கு கடிதம் எழுதிய சுகேஷ் சந்திரசேகர்!

மும்பை : பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு, சிறையில் இருக்கும் மோசடி மன்னன் காதல் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர், மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக பல புகார்கள் உள்ளன.

சுகேஷ் சந்திரசேகர்

சுகேஷ் சந்திரசேகர்

சில ஆண்டுகளுக்கு முன் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி டிடிவி தினகரனிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தார். இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 16 சொகுசு கார்கள், 82 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருக்கும்போதே மோசடி

சிறையில் இருக்கும்போதே மோசடி

2017ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் சுகேஷ், தொழிலதிபர் ஒருவருக்கு ஜாமீன் எடுத்து தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.இதில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியபால், உதவியாளர் பிங்கி இரானி உள்ளிட்டோரும் கைதாகினர். மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.

கோடிக்கணக்கில் பரிசு பொருள்

கோடிக்கணக்கில் பரிசு பொருள்

அதுமட்டுமில்லாமல், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகை நோரா பதேஹி உள்ளிட்ட இன்னும் சில நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசையும் இவர் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அந்த பரிசுப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காதல் கடிதம்

காதல் கடிதம்

இந்நிலையில், ஹோலி பண்டிகைக்கு தனது காதலி ஜாக்குலினுக்கு வாழ்த்து தெரிவித்து சுகேஷ் காதல் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதில், அற்புதமான மற்றும் அழகான என் ஜாக்குலினுக்கு ஹோலி வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் உனக்கு நான் வாக்கு கொடுக்கிறேன். நீ இழந்த உன் அடையாளத்தை 100 மடங்காக உனக்குத் திருப்பித் தருவேன். அது என்னுடைய கடமையாகும்.

லவ் யூ பேபி

லவ் யூ பேபி

உனக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன். லவ் யூ பேபி, நீ எப்போதும் சிரித்துக் கொண்டே இரு, நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், ஐ லவ் யூ இளவரசி, உன்னை மிஸ் பண்றேன் என் அன்பே" என எழுதியுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் எழுதிய இந்த காதல் கடிதம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X