twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6 மொழிகள்... 2500 படங்கள்.. சுகுமாரியின் 64 ஆண்டு திரை வாழ்க்கை!

    By Shankar
    |

    சுகுமாரி.. தென்னிந்திய திரையுலகில் ஹீரோயின், குணச்சித்திர வேடம், வில்லி, அம்மா, பாட்டி என அத்தனை வேடங்களிலும் வாழ்ந்தவர்.

    அவர் இரு தினங்களுக்கு முன், வீட்டில் விளக்கேற்றும்போது தீ விபத்தில் சிக்கி காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    தனது 10வது வயதில் சினிமாவுக்கு வந்தவர் சுகுமாரி. 64 ஆண்டுகள் திரையுலகில் நடித்துக் கொண்டே இருந்தார். தனது கடைசி காலத்தில் கூட அவர் நடிக்காமல் இருந்ததில்லை.

    பத்மினியின் உறவினர்...

    பத்மினியின் உறவினர்...

    பிறப்பால் மலையாளியாக இருந்தாலும், சுகுமாரி பிறந்தது நாகர்கோயிலில்தான். அன்று இந்தப் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அந்த நாளில் திருவிதாங்கூர் நடன சகோதரிகள் என அறியப்பட்டு, பின்னர் தமிழில் புகழ்பெற்ற லலிதா, பத்மினி, ராகினியின் தாயார் சரஸ்வதி அம்மாளின் அண்ணன் மகள். சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்ட சுகுமாரி, நடனத்தில் நன்கு பயிற்சி பெற்றிருந்தார்.

    ஓர் இரவு

    ஓர் இரவு

    தனது பத்தாவது வயதில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் "ஓர் இரவு' படத்தில்தான் சுகுமாரி முதல்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் "ஏ குரூப்' நடனக் கலைஞராக நடனமாடியுள்ளார்.

    இயக்குநர் பீம்சிங்குடன் திருமணம்

    இயக்குநர் பீம்சிங்குடன் திருமணம்

    தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் பீம்சிங்கை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    வேட்டைக்காரன்

    வேட்டைக்காரன்

    அவரது மரணத்துக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் நடிக்கத் தொடங்கிய சுகுமாரி, யாரடி நீ மோகினி, பொன்னர் சங்கர் படங்களில் நடித்தார். தமிழில் அவர் கடைசியாக நடித்தது விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில்.

    நம்ம கிராமம்

    நம்ம கிராமம்

    "நம்ம கிராமம்' படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். 2003-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.

    கடைசி படம் எம்மானுவல்

    கடைசி படம் எம்மானுவல்

    மலையாளத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார் சுகுமாரி. இந்த ஆண்டு லால் ஜோஸ் இயக்கத்தில் எம்மானுவல் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. 2012-ல் மட்டும் 5 படங்களில் நடித்திருந்தார் சுகுமாரி.

    முதல்வர் ஜெயலலிதாவின் தோழி

    முதல்வர் ஜெயலலிதாவின் தோழி

    முதல்வர் ஜெயலலிதா, நடிகை மனோரமா, அண்மையில் காலமான ராஜசுலோசனா ஆகியோர் சுகுமாரியின் நெருங்கிய தோழிகள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகுமாரியை சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனைக்கே சென்று முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார்.

    2500 படங்கள்

    2500 படங்கள்

    தன் 64 ஆண்டு கலை வாழ்க்கையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் 2500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சுகுமாரி. அத்தனை மொழியிலும் தன் சொந்தக் குரலில்தான் டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Late legendary actress Sukumari has acted in 2500 movies in 6 major languages in her 64 years old film career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X