சுல்தான் படத்தின் அடுத்த அப்டேட்! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவுள்ள படம் சுல்தான்.
இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க, விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
சமீபத்தில் ட்ரைலர் வெளியாகிய நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

மகாபாரத கதை
இந்த படத்தின் டீசர் பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டீசரில் "மகாபாரதத்த படிச்சிருக்கயா?" என்ற வசனத்துடன் தொடங்கி "மகாபாரத கதையை போர் இல்லாமல் படிச்சு பாருங்க சார்" என டீசரில் கார்த்தி பேசும் வசனம் இணையத்தில் வைரலானது.

நூறு தல ராவணன்
படத்தின் ட்ரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. ஆக்ஷன், லவ் காட்சிகள் நிறைந்த ட்ரைலரில் வசனங்கள் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தது. தன்னை 100 தல ராவணன் என்று கார்த்தி வசனம் சொல்லும் காட்சிகள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

யுவன் ஷங்கர் ராஜா
இந்தப் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில் படத்திற்கு பின்னணி இசை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என சொல்லப்படுகிறது. பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்த முடிவு என தெரிகிறது. படத்தின் ட்ரைலருக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஷன் காட்சிகள்
அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலரில் ஆக்ரோஷமாக ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











