ரிலீசுக்கு முன்னரே வசூல் வேட்டை நடத்திய சுல்தான்!

சென்னை : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் திரைப்படம் உருவாகி உள்ளது இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

Recommended Video

SULTHAN Public opinion | Sulthan Review , karthi, Rashmika Mandanna | Sulthan Public Talk

பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களுக்கு இருந்த ஏக்கத்தை தற்போது போக்கியிருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா முதன் முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.

கடந்த சில வாரமாகவே சுல்தான் பற்றிய பல செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வர இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பல கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக சில செய்திகள் வெளிவந்துள்ளது.

பாக்யராஜ் கண்ணன்

பாக்யராஜ் கண்ணன்

ரெமோ வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் முதல் படத்திலேயே தனது ஆணித்தனமான வெற்றியை பதித்த இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் தற்பொழுது அடுத்த படத்தை மிகப்பிரம்மாண்ட முறையில் இயக்கியுள்ளார்.

பிரபலமான நட்சத்திரங்கள்

பிரபலமான நட்சத்திரங்கள்

முதல் படத்தில் திகட்டாத காதல் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிகள் என அசத்தியிருந்த பாக்யராஜ் கண்ணன் சுல்தான் படத்தை பக்கா ஆக்சன் படமாக இயக்கியுள்ளார். மேலும் இதில் கார்த்திக் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் லீட் ரோலில் நடிக்க பல பிரபலமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

இதுவரை தான் தயாரிக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் பார்த்து பார்த்து செலவிட்டு வந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு சுல்தான் படத்திற்கு பட்ஜெட்டை வாரி குவித்துள்ளார். எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய பொருட்செலவில் சுல்தான் படம் உருவாகியிருக்க தற்பொழுது இதன் டிக்கெட் விற்பனை திரையரங்குகளில் அமோகமாக நடைபெற்று கொண்டுள்ளது.

லாபம் கிடைத்துள்ளதாக

லாபம் கிடைத்துள்ளதாக

சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய சுல்தான் கொரானா சூழல் காரணமாக இன்று வெளியாகி உள்ளது. ரிலீசுக்கு முன்பே மின்னல் வேகத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும். 40 கோடி பட்ஜெட்டில் உருவான சுல்தான் தற்போது 67 கோடி ரூபாய் வரை மார்க்கெட்டிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. எனவே அதன்படி கிட்டத்தட்ட 27 கோடி ரூபாய் ரிலீசுக்கு முன்னரே லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X