சுல்தான் டீசர் அப்டேட்... கார்த்தி ரசிகர்கள் குஷி!
சென்னை: கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் சுல்தான்.
இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார், விவேக் சிவா & மெர்வின் ஸோலோமன் இசையமைத்துள்ளனர்.
கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் டிரீம் வாரியர் பிக்சார்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இரண்டாவது படம்
சுல்தான் படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், இயக்குனர் அட்லீயின் அசிஸ்டண்ட் ஆவார். இதற்குமுன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார். சுல்தான் பாக்யராஜுக்கு இரண்டாவது படமாகும்.

தமிழில் அறிமுகம்
நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல தெலுங்கு திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் ராஷ்மிகா.

தியேட்டரில் ரிலீஸ்
சுல்தான் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதமே நிறைவடைந்த நிலையில் படத்தை நேரடியாக ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்ய போவதாக தகவல்கள் வந்தன. ஆனால், படக்குழு படத்தை ஏப்ரல் மாதம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பாளர் ட்வீட்
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஸ்பெஷல் போஸ்டர் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ள நிலையில் நாளை மறுநாள் (பிப்ரவரி 1) மாலை 5 மணிக்கு சுல்தான் படத்தின் டீசர் வெளியிடவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











