இன்று வெளியாகவுள்ள சுல்தான் ட்ரைலர்.. ஜெய் சுல்தான்!

சென்னை: கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவுள்ள படம் சுல்தான்.

இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க, விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இன்று வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாபாரத கதை

மகாபாரத கதை

இந்த படத்தின் டீசர் பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டீசரில் "மகாபாரதத்த படிச்சிருக்கயா?" என்ற வசனத்துடன் தொடங்கி "மகாபாரத கதையை போர் இல்லாமல் படிச்சு பாருங்க சார்" என டீசரில் கார்த்தி பேசும் வசனம் இணையத்தில் வைரலானது.

வைரலாகும் பாடல்கள்

வைரலாகும் பாடல்கள்

படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டதை தொடர்ந்து பாடல்களை வெளியிட்டது. அனிருத் குரலில்
'ஜெய் சுல்தான்', சிம்பு குரலில் 'யாரையும் இவளோ அழகா பார்க்கல' , மற்றும் மற்றொரு பாடலான 'எப்படி இருந்த நாங்க' என மூன்று பாடல்களை வெளியிட்டுள்ளது. பாடல்களும் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் அறிவிப்பு

தயாரிப்பாளர் அறிவிப்பு


கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்
திட்டமிட்டபடி சுல்தான் வெளியாகுமா என்ற கேள்விக்கு
"அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவே முகக்கவசம் அணிந்து, போதிய முன்னெச்சரிக்கைகளுடன் திரையில் அதிக உற்சாகத்துடன் பார்த்து மகிழக் காத்திருங்கள்" என படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெய் சுல்தான்

ஜெய் சுல்தான்

திட்டமிட்டபடி படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. அதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் S.R. பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் #JaiSulthan எனும் ஹாஸ்டேக் உடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Read more about: sultan சுல்தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X