தியேட்டர் மட்டுமில்லை பாஸ்.. ஓடிடியிலும் ரிலீஸ் ஆகப் போகுதாம்.. சுல்தான்!
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ந் தேதி திட்டமிட்டபடி வெளியாக உள்ள நிலையில், திரையரங்கில் வெளியான 15 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா,நெப்போலியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து உள்ள இப்படம் ஏப்ரல் 2ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ட்ரீம் வாரியர் நிறுவனம்
கார்த்தியின் முந்தைய படங்களை விட இப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் விநியோக உரிமையை யாருக்கும் கொடுக்காமல் தமிழகத்தில் நேரடியாக வெளியிட ட்ரீம் வாரியர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா
இளசுகளின் கனவு கன்னியாக ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும், விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். கே.ஜி.எப்1ல் கருடா கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திர ராஜூஇப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

சக்கைப்போடு போட்ட டீசர்
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அக்ஷன் காட்சிகள் நிறைந்த டீசரில் மகாபாரதம் படிச்சிருக்கியா.. என்று ஆரம்பிக்கும் வசனங்களுடன் தொடங்கி, இறுதியில் மகாபாரத கதையை போர் இல்லாமல் படிச்சு பாருங்க சார்.. என கார்த்தி பேசும் வசனத்துடன் டீசர் முடிவடையும் . இந்த டீசர் வைரலாகி படத்தின்மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் இப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 2ந்தேதி திரையரங்குகளில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் திரையரங்குகளில் வெளியான 15 நாட்களுக்குப்பிறகு ஓடிடியில் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால்,இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வரவில்லை.


Click it and Unblock the Notifications











