இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சுல்தான்.. எப்போது தெரியுமா?
சென்னை : நடிகர் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சுல்தான் திரைப்படம் வெளியானது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் நெப்போலியன், லால், சென்றாயன் என பலர் நடித்திருக்க ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
பல்வேறு வசூல் சாதனைகளை செய்த சுல்தான் இப்பொழுது ஓடிடியில் வெளியாக இருக்க அதன் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி மவுசு
நடிகர் கார்த்தியின் திரைப்படங்களுக்கு என்றே தனி மவுசு உள்ளது. தமிழ் சினிமாவைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த சுல்தான் திரைப்படம் வெளியான நாள் முதலே வசூல் மழையை பொழிந்தது.

விவசாயத்தை கையில்
காலம் காலமாக அடிதடி சண்டையில் ஈடுபட்டு வரும் கார்த்தியின் குடும்பத்தார் ஒரு சில பிரச்சனைகளால் கிராமத்திற்கு சிறிது காலம் சென்று தங்கிவிட நினைக்க அங்கு இருக்கும் சில பிரச்சினைகளைத் தீர்க்க விவசாயத்தை கையில் எடுக்கின்றனர் என்பதை மிக அழகாகவும் அனைவரும் ரசிக்கின்ற வகையிலும் இந்தத் திரைப்படத்தில் கூறப்பட்டிருந்தது.

ராஷ்மிகா மந்தனா
நீண்ட நாட்களாக ரஷ்மிகா மந்தனா தமிழில் எப்போது வருகை தருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கு அதை பூர்த்தி செய்யும் விதமாக சுல்தான் படத்தில் நடித்து தமிழில் நேரடியாக அறிமுகத்தை கொடுத்த ராஷ்மிகா மந்தனா இதில் காட்சிக்கு காட்சி தன்னுடைய அழகான நடிப்பால் மேலும் மேலும் மெருகேற்றி இருக்க இந்த படத்திற்கு மேலும் பக்கபலமாக அமைந்தது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்
யோகி பாபு ,நெப்போலியன்,லால், சென்றாயன், பொன்வண்ணன் என மிகப் பெரிய பட்டாளமே நடித்திருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட சுல்தான் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி வரும் மே 2ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











