கார்த்திக்கு புதிய சாதனை தந்த சுல்தான்...மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தயாரிப்பாளர்
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கார்த்தி நடித்த சுல்தான் படம் 2 நாட்களுக்கு முன் தியேட்டரில் ரிலீசானது. முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றதால், தியேட்டர் உரிமையாளர்களிடம் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள சுல்தான் படம், தியேட்டரில் பார்க்க ஏற்ற படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப படங்களை ரசிக்கும் ரசிகர்களிடமும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் எதிர்மறை விமர்சனங்களை கொடுத்தாலும், அது படத்தை பெரிய அளவில் பாதிக்காது என்றே சொல்லப்படுகிறது.

கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இப்படி ஒரு சிறப்பான ஓப்பனிங்கை பெற்றுள்ள படம் சுல்தான் தான். இந்த புதிய சாதனையால் கார்த்தி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், துவக்க நாளிலேயே சிறப்பான வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அவர் தனது பதிவில், சிறப்பான துவக்கத்தை ரசிகர்கள் கொடுத்ததில் மிகப் பெரிய சந்தோஷம். கார்த்தியின் வாழ்க்கையில் சிறப்பான ஓப்பனிங்கை கொடுத்த படம் சுல்தான். இந்த இக்கட்டான சூழலில் ஒட்டுமொத்த சினிமா உலகிற்கே இந்த படம் நம்பிக்கையை கொடுத்துள்ளது. அனைத்து காட்சிகளும் மனம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அனைவருக்கும் நன்றி.


Click it and Unblock the Notifications