சுல்தான் குறித்து வரும் நெகடிவ் விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் S.R. பிரபு பதில் ட்வீட்!
சென்னை: கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான்.
இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடல்களுக்கு விவேக் & மெர்வின் இசையமைத்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படம் வெளியாகியுள்ளது.

திரையரங்கில் வெளியீடு
சுல்தான் திரைப்படம் OTT ரிலிஸ் என முதலில் செய்திகள் வர படத்தின் தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளர்களுக்காக படத்தை திரையரங்கில் வெளியிட ஒரு மனதாக முடிவு எடுத்தார். அதன் விளைவாக ரசிகர்களின் கூட்டம் திரையரங்கங்களுக்கு படை எடுத்துள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்
எதிர்பார்த்தது போல கமர்ஷியல் ரீதியாக படத்திற்கு பாசிடிவ்
ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. பெரிய அளவில் இல்லா விட்டாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு செல்லும் படமாக சுல்தான் திரைப்படம் அமைந்துள்ளது. ரசிகர்கள் நல்ல வரவேற்பையே கொடுத்துள்ளனர்.

சிறப்பான சண்டை காட்சிகள்
நடிகர் கார்த்தி எப்போதும் தனித்துவமாக கதையை தேர்ந்தெடுத்து தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவர கூடியவர். சுல்தான் படத்திலும் அதையே செய்துள்ளார். சண்டை காட்சிகளில் பெரிய ஆக்ஷன் ஹீரோ போல வியக்க வைக்கிறார். மொத்தத்தில் கார்த்திக்கு இதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

மொத்த வசூல்
மேலும் சுல்தான் திரைப்படம் கார்த்திக்கு கேரியர் பெஸ்ட் ஓபனிங் படமாக அமைந்துள்ளது. சென்னை மாநகரில் மட்டும் 55 லட்சம் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வந்துள்ளது. இந்த சூழலில் சுல்தான் திரைப்படம் தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரிதாக உதவியுள்ளது.
Recommended Video

தயாரிப்பாளர் ட்வீட்
சுல்தான் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து தயாரிப்பாளர் S.R. பிரபு ட்வீட்டரில் தெரிவித்திருப்பதாவது, "எங்கள் பல படங்களுக்கு விமர்சகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்,நான் எப்போதும் அவர்களுக்கு நன்றியாக இருப்பேன். சுல்தான் பற்றி சிலருக்கு வேறு கருத்துகள் இருக்கலாம்.நான் அதை மதிக்கிறேன். ஆனால் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கண்ணியமாக இருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, (உ)எங்கள் தட்டுகளுக்கு உணவைக் கொண்டு வருவது சினிமா மற்றும் பார்வையாளர்கள் தான்!" என்று சொல்லி உள்ளார்


Click it and Unblock the Notifications











