அடேய்.. என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரஸி புரமோட் பண்றீங்களா.. காண்டான சுல்தான் தயாரிப்பாளர்!
சென்னை: சுல்தான் படத்திற்கு பைரஸி புரமோட் செய்த நெட்டிசனுக்கு சுவாரசியமாக வார்னிங் கொடுத்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு.
Recommended Video
ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான்.
இந்தப் படம் கடந்த 2ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

விவேக் - மெர்வின்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸிலும்
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. சுல்தான் படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுக்கவும் ரிலீஸ் ஆகியுள்ளது.

குடும்ப பார்வையாளர்கள்
இந்நிலையில் சுல்தான் படத்தின் தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு ரசிகர்கள் மத்தியில் இரண்டாவது நாளாகவும் படத்திற்கு நல்ல ஆதரவு இருக்கிறது என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதிகமான குடும்ப பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவதைக் கண்டு மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதோ வரேன்டா..
அவரது பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் சுல்தான் படம் தன்னுடைய டெலிகிராம் சேனலில் இடம் பெற்றிருப்பதாக கமெண்ட் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த எஸ்ஆர் பிரபு, அடேய் ஏன் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரஸி புரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டிங்களா.. இதோ வரேன்டா.. என ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

ஓட்டம் பிடித்த நெட்டிசன்
இதனை தொடர்ந்து தன்னுடைய பைரஸி பதிவை அந்த நெட்டிசன் டெலிட் செய்தார். சுல்தான் படம் ரிலீஸ் ஆன சற்று நேரத்திலேயே ஆன்லைனில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











