twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுல்தான் கதை எளிதாக எடுக்கப்பட்ட படமல்ல – கார்த்தி

    |

    சென்னை : டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது. ஆக்ஷன் கலந்த குடும்ப படத்தில் சவாரஸ்யமான கேரக்டரில், ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்துள்ளார்.

    சுல்தான் படம் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கார்த்தி கூறுகையில், சண்டையே பிடிக்காத என் கேரக்டர் 100 ரவுடிகளை சமாளிப்பது வித்தியாசமானதாக இருந்தது. அது மிகப் பெரிய சவால். 20 நிமிடம் கதை கேட்ட பிறகே இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னேன்.

    எளிதான காரியமில்லை

    எளிதான காரியமில்லை

    இது பாக்யராஜ் கண்ணணின் 2வது படம். இந்த கதையை கேட்ட போது அவரின் திறமை புரிந்தது. அதை படமாக்கியது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒரே நேரத்தில் 100 பேரை காட்ட வேண்டும் என்பதற்காக அட்வான்ஸ்ட் லென்சுகளை பயன்படுத்தினோம்.

    தினம் தினம் திருவிழா

    தினம் தினம் திருவிழா

    போக்குவரத்திற்காக 67 பஸ்களை பயன்படுத்தினோம். ஒவ்வொரு நாளும் பெரிய திருவிழா போன்று இருந்தது. இவ்வளவு அதிகமான நடிகர்களை எவ்வாறு கையாள போகிறார்கள் னெ்ற கேள்வி முதல் சில நாட்கள் எனக்கு இருந்தது.

    ராஷ்மிகாவிற்கு நல்ல துவக்கம்

    ராஷ்மிகாவிற்கு நல்ல துவக்கம்

    அதிக கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் ராஷ்மிகா நல்ல ஒத்துழைப்பை தந்தார். சுல்தான், அவருக்கு தமிழில் நல்ல துவக்கத்தை தரும். உண்மையிலேயே நன்கு அனுபவித்து தனது முதல் படத்தை அவர் செய்தார். பொதுவாக ஆக்ஷன் படங்களில் ஹீரோயினுக்கு குறைந்த அளவு பாடல்களே இருக்கும். ஆனால் சுல்தானில் வித்தியாசம். நல்ல துணிச்சலான, கோபக்கார கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.

     ஓடிடி.,யை மறுத்து விட்டோம்

    ஓடிடி.,யை மறுத்து விட்டோம்

    இந்த படத்தை பொங்கலுக்கே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது முடியாமல் போனது. ஓடிடி அழைப்புகளை கடந்த ஆண்டே மறுத்து விட்டோம். சினிமா துறையிலேயே தென்னிந்திய சினிமாக்கள் தான் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைத்தாலும், ரசிகர்கள் மீதும், படத்தின் கதை மீதும் நம்பிக்கை உள்ளது.

    மறக்க முடியாத அனுபவம்

    மறக்க முடியாத அனுபவம்

    கொரோனா ஜோக்குகள், கொரோனா சூழ்நிலை என பலவும் படத்தில் உள்ளன. பொன்னியின் செல்வன், வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அது இரு பாகங்களாக எடுக்கப்படும் படம்.

    மீண்டும் ஒரு வலுவான தெலுங்கு படத்தில் நடிக்க சொல்லி கேட்கிறார்கள். என்னிடம் அதற்கு பதில் இல்லை. நல்ல கதை வந்தால், கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.

    English summary
    Sulthan was not an easy film to shoot says karthi latest interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X