சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்!

சென்னை: சன் தொலைக்காட்சி பொதுவாகவே பிரபலமான பேசாளர்களை சரியான நேரத்தில் பயன் படுத்தி பல விதமான நிகழ்ச்சிகள் செய்வார்கள்.

பல ஆண்டுகளாக சாலமன் பாப்பையா சன் டிவி யின் செல்ல குழந்தையாக தவழ்ந்து இப்போது தாத்தா வாக மாறியும் அவருடைய திறமையை விட வில்லை . பல பட்டிமன்றங்கள் நடக்கின்றது . பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு என்றால் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நிச்சியம் நம் வீட்டின் ஒரு அங்கமாக இருக்கும் . அந்த வரிசையில் ராஜா , பாரதி பாஸ்கர், போன்றோர் இன்னும் நிறைய சாதனைகள் செய்து வருகின்றனர். இப்பொழுது சமீபத்தில் புது வரவாக சுமதி ஸ்ரீ யும் பல நிகழ்ச்சிகள் செய்ய துவங்கி உள்ளார்.

 sumathi shri in sun tv

பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீ, தன் சொற்பொழிவிற்காக, உலகெங்கும் ரசிகர்களை கொண்டிருப்பவர்.வாட்ஸ் அப், அதிகம் பகிரப்படும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் இவருடையதே. தன் எட்டு வயதில், பேச்சு ப் பயணத்தை தொடங்கியவர் இன்று வரை பேச்சுத் துறையில் தொடர்ந்து இயங்குகிறார்.

அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என கண்டம் விட்டு கண்டம் சொற்பொழிவாற்றுபவர். ஜாம்பியா,உகாண்டா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு சொற்பொழிவிற்காக அழைக்கப்பட்ட முதல் பெண் பேச்சாளர்.தன் சொற்பொழிவிற்காக அமெரிக்க தமிழ் சங்கங்கங்களின் கூட்டமைப்பான "ஃபெட்னா" விருது உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றவர்.

 sumathi shri in sun tv

பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை உரை, கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு,தமிழ் அமைப்புகளில் இலக்கிய உரை, லயன்ஸ்,ரோட்டரி சங்கங்களில் சொற்பொழிவு என பல்வேறு தளங்களில் பேசி வருபவர்.ஒவ்வொரு வருடமும்,தன் பேச்சின் மூலமாக லட்சக்கணக்கான மக்களை சந்தித்து திரைத்துறையிலும்,வசன கர்த்தாவாகவும்,பாடலாசிரியராகவும் இயங்கி வருகிறார்.

அவர், நாளை ,( 10 - 12- 2019), மாலை ,4 மணி முதல்,சன் நியூஸ் தொலைக்காட்சியில், திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் நேரலையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருவண்ணாமலை கார்த்திகை தீப மகிமை குறித்துப் பேசுகிறார்.

 sumathi shri in sun tv

பல தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ய போட்டி கொண்டு இருக்கின்றன. இருந்தாலும் சுமதிஸ்ரீயின் குரலில் சன் டிவியில் தெள்ள தெளிவாக பல அப்டேட்ஸ்களை உடனுக்குடன் பார்க்கலாம்.

கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X